பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னில் வடித்த புதுமைச் சிலேயவள் ; ஆற்றிடைத் தேங்கிய அரிப்புக் கருமணற் கூந்த லுடைய கொடியிடைக் கன்னி , உழுந்து போன்ற உயர்புரு வத்தாள்; கன்னத் திடையில் கவின்செய் சிறுசுழி மறிந்து பாயும் மதர்விழி மடமகள் ; முல்லே நானும் பல்லின் அழகி ; வடித்த தேனும் வாய்மொழி யாட்டி என்னைப் போலப் பணிபுரிந் திருந்தாள். கையச் சுப்பொறி கைவிரல் அடிக்க மைவிழி வேலிணை வந்துவந் தென்னக் குத்தும் ; நெஞ்சில் குளிர்மையைத் தேக்கும் ! அடிக்கடி எழுந்தே அருகில் வருவாள் ; * இச்சொல் என்ன எழுத் தெனக் கேட்பாள் ; அடித்த படிகளே எடுத்துவந் தளித்துப் * படித்துப் பார் எனப் பரிவாய்ச் சொல்வாள் ; செவ்வாய் திறந்து வெண்ணகை காட்டி மயிலைப் போல அயலிற் செல்வாள் ; காலையில் நான்வரு சாலேயின் ஒரம் சிற்பி செதுக்கிய பெண்சிலை போல வழிபார்த் திருப்பாள் ; வந்தபின் சிரிப்பாள் ! இருவரும் இணைந்தே தொழில்மனை போவோம் ! வேலே முடிந்ததும் மாலையில் இருவரும் இணைந்து வந்தே இருப்பிடம் பிரிவோம்! ஓடின நாட்கள் ! ஒன்றின உளங்கள்! அன்பும் எம்முள் ஆணிவேர் விட்டது ஒருநாள் பட்டண ஒர மிருக்கும் சிற்றுார் திரியச் சென்றனம் இருவரும் ! ó I