பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்குடன் இருக்கும் காட்சியோடு படமொன் றிருக்கப் பார்த்தன கண்கள்! படத்தை எங்கோ பார்த்ததைப் போன்ற நினைவுண் டாக நிலைதடு மாறினேன் ! அருகில் இருந்த அவளே விளித்தே, ‘இந்தப் படத்தில் இருப்பவர் யார்?’ என வேதனை யோடு வினவ லானேன் ! ‘என்றன் தந்தை புகைப்படம்!” என்ருள் ! அவரும் உடனே அறைக்குள் வந்தார்! கண்டன கண்கள்! விரிந்தன அவர்மேல்! அப்பா ! என்றே அசைந்ததென் உதடும் ! அவரும் திகைத்தார் ! நானும் திகைத்தேன்! குடிமுறை கேட்டேன்; குலமுறை கேட்டேன்! 'மறுமண வாழ்க்கை மகளிவள் 1’ என்ருர்! துடித்தேன்; துடித்தேன்! சொல்எழ வில்லை! அப்பா வேதான்! அதில்தவ றில்லை ! "என்தாய் வாழ்வை, என்னரும் வாழ்வைத் தன்னலம் பேணித் தகர்த்த அப்பா! தங்கையின் வாழ்வைத் தகர்த்த அப்பா !” என்று சீறி நாற்காலி எடுத்து மண்டையில் ஓங்கி ஓங்கி அடித்தேன்! துடித்தார்! அடங்கிற் றுயிரே 1 58