பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பின்ளேத்தாய்ச்சி எங்கோ தொலைவில் எரியும் ஊர்போல் மேற்குத் தொடுவான் மலைகள் விளங்கின! தென்னே, பலா,மா, செழுங்கழைக் காட்டுப் பசுமை நிறத்தில் பாய்ந்தது பொன்னுெளி ! மலையின் உச்சி பரிதி மறையச் சாரல் அருவி சலசலத்(து) இரையும் ! கருங்கால் வெண்னுடல் பெருமூக்கு நாரை கத்திக் கத்திக் காட்டைக் குறுகும் ! வானே முட்டும் கோயில் மணியும் அந்தி வந்ததை அறிவித்(து) ஒயும் 1 வானில் முன்னர் வந்த மீன்போல் வீட்டுத் திண்ணை விளக்கை ஏற்றிப் பாட்டி வந்து தெருவைப் பார்த்தாள் ! தெருவின் கோடியில் தெரிந்தனர் இருவர்! நின்று நின்றே இடுப்பிற்கை யூன்றி வந்தாள் ஒருபெண் மலர்முகம் சோர்ந்தே ! அவளின் அருகில் ஒருவன் வந்தான் : கட்டுடற் காளை ; கரிய நிறத்தான்; முகப்பொலி வுடையோன் ; முறுக்கு மீசையன் ; பணிவாய்ப் பேசிப் பகையும் வெல்லும் 54