பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிவும், இனிமைச் சொல்லும் உடையவன்; பாட்டி நிற்கும் வீட்டின் அருகில் வந்தான் ; நின்றன் ; வணங்கிச் சிரித்தான் ; அவனுடன் வந்த அணங்கைக் காட்டி, 'இவள்என் மனைவி ! ஈரைந் திங்கள் நிரம்பினள் எம்மூர் நெடுந்தொலே வாகும் ! மருத்துவ மனையிற் சேர்த்து வைக்க அழைத்து வந்தேன்! அந்தியும் வந்ததே! இரவு மட்டும் இவளிங் கிருக்க இடந்தர வேண்டும் ; இடந்தர வேண்டும் ! காலேயில் இவளே மருத்துவச் சாலை சேர்ப்பேன்! என்று கெஞ்சிநின் றிருந்தான் ! பிள்ளைத் தாய்ச்சி பெருமூச் செறிந்து தூணில் தலையைத் தொங்க விட்டுக் கையால் இடையைக் கசக்கிக் கொண்டே அப்படி இப்படித் தலையை அசைத்தே நின்று சோர்ந்து நெடுமூச் செறிந்தாள் ! சாலைப் போல வயிறு சரிந்து மேலெலாம் வெளுத்து மினுமினுப் பேறிக் கொவ்வைச் செவ்வாய் குளிர்மை இழப்ப மைவிழி மஞ்சள் விழியாய் மாறக் கன்னம் உப்பிக் கண்ணே மறைக்க நிற்க முடியாமல் நின்றுகொண் டிருந்தாள்! 'பிள்ளே பெற்ற பெரியம் மாவே ! இரவு மட்டிலும் இருக்க இடத்தைக் காட்டுக! காலேயிற் கணவ ைேடு சென்று மருத்துவம் செய்திடு விடுதி அடைவேன்' என்று கெஞ்சினுள் அவளும்: