பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்துக் காலைப் பக்கமாய் நீட்டி ஊங்கொட்டிப் பாட்டியின் உரைகேட் டிருந்தாள்! 'துரங்கினுல் பாட்டியும் தூங்குவாள்' என்று பொய்த்துயில் புரிந்து புரண்டு படுத்தாள்! பாட்டி, படுத்தவள் காலேத் தொட்டே ஆட்டி எழுப்பினுள் ! அடர்ந்த மயிர்கள் கையிற் பட்ட்தைக் கண்டாள் பாட்டி ! பெண்கட் கேது பெருமயிர் காலில் ? ஆணின் காலில் அடர்ந்த மயிர்கள் இருப்பதே உண்மை ! இதுஎன் புதுமை ? என்று நினைத்தே எழுந்தாள் பாட்டி 'நடந்த களேப்பு ! நன்ருய்த் துரங்கு ! துங்கில்ை சோர்வு தொலையும் ! நானும் வெளித்தாழ் வார விரிப்பிற் படுப்பேன்! என்றே அறையை இழுத்துப் பூட்டி வந்து மகனின் வழிபார்த் திருந்தாள் அக்கம் பக்கத் தொலிகள் அடங்கின ! வானிலும் கார்முகில் வந்து சூழ்ந்தது! இரவில் திரிந்தே இரையைத் தேடும் பறவையின் கூச்சல் படப்பையிற் கேட்டது! சந்து விளக்குகள் தணியத் தொடங்கின! மரத்துப் பழுப்பு வாடையில் உதிரும் சிற்ருெலி காதில் தெளிவாய்க் கேட்க, ஊரின் கோடியில் ஒருநாய் குரைத்தது! வாயிற் கதவை யாரோ வருடுதல் பாயில் இருந்த பாட்டி உணர்ந்தாள்! மகனென் றெண்ணி எழுந்து வந்தாள் ! ஏதோ எண்ணி இடையில் நின்று வந்தவன் யாரெனச் சந்திற் பார்த்தாள் ! - 57