பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தியில் அவளே அழைத்துவந் தவனே என்ப தறிந்தே என்?"எனக் கேட்டாள்! 'பாட்டி! மருத்துவப் பணிமனே சென்றேன். 'இரவே மனைவியை இட்டு வந்து . விரைவில் விடு'என மருத்துவர் சொன்னர்’ என்ருன் வந்தவன்! அவனுடன் இருவர் மறைவில் வருவதைப் பாட்டியும் கண்டாள் ! "மகனே! மனைவி வயிற்றுநோய்ப் பட்டாள் ! மணிபத் திருக்கும்! மருத்துவ மனேக்கு மாட்டு வண்டியிற் கூட்டிச் சென்றேன்! 'இரண்டொரு மணியில் ஈனுவாள்' என்றே. மருத்துவர் உரைத்தார் மனைவியை விட்டு வந்தேன் ! காலேயில் மருத்துவ மனேக்குச் சென்றுபார்” என்றே பாட்டி செப்பினுள் ! வந்தவன் திகைத்தான்; வந்த வழியே சென்ருன்! அவனுடன் சென்றனர் இருவரும்: பாட்டி மகன்வரு வழிபார்த் திருந்தாள்! மகனும் வந்தான்! வாயில் திறந்து வீட்டுள் நிலைமையை விளக்கினுள் காதில் ! சிட்டெனப் பறந்து சிப்பாய் பலரை இட்டு வந்தான் இல்லத் துள்ளே! பூட்டைத் திறந்து சிப்பாய் புகுதலும் கத்தியைக் காட்டிக் கதவின் ஒரம் பிள்ளைத் தாய்ச்சி பேசா திருந்தாள், ! விலங்கை மாட்டி வெளியில் ஆடை களைய ஆண்கண் டாரே ! 58