பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகோ வியமவள் ; பழகு தீந்தமிழ் குழைந்த பேச்சினள்; குறும்புக் காரி ! நல்லறம் பேணி இல்லறம் நடத்தினர்; இல்லோர் இருப்போர்க் கீந்து பலநாள் வாழ்ந்தனர்; மற்றவர் வாழ வாழ்ந்தனர் ! தாழ்விலாக் குடியில் தம்பெயர் நாட்ட மகப்பே றில்லா மனக்குறை முளேத்தது! முகத்தில் நீங்காக் கவலையும் மூண்டது ! மருத்துவர் வந்தார் ; மருந்துதின் ருேய்ந்தனர் ! பொருத்தம் இலையெனப் புகன்றனர் சில்லோர் ! வருத்தம் மிகுந்தது; வாட்டம் வளர்ந்தது! தெருப்பூ சாரி செப்பிய தெல்லாம் செய்தனர்; பலனிலே வேதனை எய்தினர்! ஐயர் அர்ச்சனே அடிக்கடி செய்தும் மகப்பே றில்லா வாட்டமே மிகுந்தது ! நகைத்தனர் இளைஞர் நரைமூ தாட்டி ஒருத்தி, ஊரின் கோடியி லுள்ள மரத்தைச் சுற்றினுல் மகப்பே றுண்டாம்' என்றனள் செய்தனர்; என்றும்போல் இருந்தனர்! சென்றன நாட்கள் ! குறைதீர்ந்த தில்லை ! உறவினர் ஒருத்தி ஊரி லிருந்து மறைபகல் வேளே வந்தாள்; அவளுடன் வந்தது குழந்தை ! மாணிக்கப் பொம்மை !! நொந்தது பிள்ளையைக் கண்டதும் நெஞ்சம்! வந்தவள், மனையிலிருந்தவருளத்தில் * வெந்து தணியும் வேதனை கண்டு, ‘நானும் எனது கணவரும் நும்போல் தேன்மொழிப் பிள்ளே இல்லா திருந்தோம்; 2