பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்த்த யாத்திரை சென்ருேம் ; தென்திசை ஆர்த்தெழு குமரி அலேகடல் மூழ்கினுேம் ; கோயிலைச் சுற்றினுேம், குளங்களைச் சுற்றிளுேம் ; மாயவன் அருளால் மகப்பேறடைந்தோம் ; நீயும் உனது நெடுந்தோட் கணவரும் போய்வந்து சொல்லும் ; பொய்யல ; உண்மை ! இரண்டொரு திங்கள் தங்கியிருந்து சுருண்டெழு அலேகடற் குமரியில் மூழ்கி இருந்தால் ஆண்ட்வன் அருளும் இருக்கும் ! வருந்த வேண்டா : மகப்பே றுண்டாம்! இன்றே செல்க !’ எனச்சொலிப் போனுள். சென்றனர் தீர்த்த யாத்திரைக் கிருவரும் ! புகைவண்டி இறங்கிப் புறப்படும் போழ்து நகைமுகம் காட்டிமுன் வந்தான் ஒருவன் ; பேரூர் காட்டும் பிழைப்பினே யுடையோன் ! வாரும் ! ஊரினேக் காட்டுவேன்! வாரும் ! தங்கு மிடமும், உணவு விடுதியும், பொங்கு கடலும், கோவிலும் போவோம்!” என்றனன் அந்த வழிகாட்டி இளைஞன். சென்றனர் இருவரும் அவன்திசை காட்ட ! வழிகாட்டி நல்ல அழகன் அவன்தன் அழகு வறுமையால் அடிபட்டிருந்தது ! பேச்சிலே சூரன்; பிறர்நிலைக் கேற்பக் கூச்ச மின்றிக் குழையும் போக்கினன்; வருவோர், போவோர் மனத்தைக் கவரும் அருமைக் குணமும், அடக்கமு முடையோன் 1. இருவரும் அவனுடன் எங்கெங்கோ சென்றனர்; இருவரும் அவன்நிலைக் கெண்ணி இரங்கினர்; 3