பக்கம்:துங்கபத்திரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

புக்கர் உருவங்களை வெள்ளியில் சிலையாக வடித்துக் கொடுத்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. ராயர் அதிகாரிகள் புடைசூழ அந்த இடத்திற்குச் சென்றார். அந்தச் சிலைகள் கவனிப்பாரற்று அன்று வைத்த இடத்திலேயே எண்ணெய் படிந்து கிடந்தன. அது மட்டுமல்ல; அந்த இரண்டு சிலைகளின் அழகிய வெள்ளி மூக்குகள் துண்டிக்கப்பட்டிருந்தன. அருகில் சென்று இந்த அலங்கோலத்தைக் கண்ட ராயரும் அப்படியே ஒரு சிலையாகி விட்டார். உல்லாசத்தைத் துறந்து உருவாக்கிய இலக்கியத்தை மன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்ற பூரிப்பில் மிதந்து கொண்டிருந்த அவருடைய இதயத்தையும் முகத்தையும் விட்டன. அருகில் நின்ற மண்டலேசுவரர் நாகம நாயக்கர், ராயரின் கவனத்தினை வேறு பக்கம் "அதோ பல்லக்கும் வந்துவிட்டது; வாசிக்க வேண்டுமே! பண்டிதர்கள் வந்திருக்கிறார்கள்!" என்றார்.

அந்தச் சிலைகள் கறுக்கி திருப்ப எண்ணி, ஏடுகளை எடுத்து முன்கூட்டியே "மண்டலேசுவரரே, இந்த மூலவர்களின் அவயங்கள் பங்கப் பட்டிருப்பதற்கான காரணத்தை அறிய வேண்டும். திருடர்கள் உடைத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. மூக்கை உடைப்பதற்குப் போதிய அளவு நேரத்தையும் தைரியத்தையும் பெற்ற திருடன் ஏன் சிலைகளையே தூக்கிப் போயிருக்கக் கூடாது? நமது அரசாங்கத்தை அவமானப் படுத்துவதற்குரிய அறிகுறியாகவே எவனோ ஒரு வினயக்காரன் இந்தச் சிலைகளின் மூக்கைத் தகர்த்து எடுத்துப் போயிருக்கிறான்?"- ராயர் இந்த வார்த்தைகளை அவருடைய மனக்குகையிலிருந்து மிகுந்த விசனத்தோடு அள்ளித் தூவினார்.

ஜரிகைப்பட்டு அணிந்து, சந்தனமும் புனுகும் மணக்க பண்டிதர் ராஜா அய்யர் கூடத்திற்குள் நுழைந்தார்.

"பண்டிதரே, நமது வழிகாட்டிகளின் சிலைகளைப் பார்த்தீரா?" - ராயர் கண் கலங்கக் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/15&oldid=1507253" இலிருந்து மீள்விக்கப்பட்டது