பக்கம்:துங்கபத்திரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

அருமைத் தந்தையை மகமதியர்களின் ஆக்கிரமிப்பிற்குப் பலியிட்டவன். 'ருக்மாங்கதா ஆபத்து வேளையில் ஆலோசனைக்கு இடமில்லை. அண்ணலுக்குப் பக்கம் போய் விட்டாள் அந்நியன்' என்று மனச்சான்று அவனை உறுத்தியது. அப்போது, ருக்மாங்கதன் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதுவரை தூங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்த விசுவநாத நாயக்கன், அந்தக் கொலைகாரன் மன்னர் பக்கம் திரும்பியதும் எழுந்து தூணின் மறைவில் நின்றுகொண்டான். ருக்மாங்கதனுக்கு மூச்சு வந்துவிட்டது. சாம்ராஜ்ஜியம் காப்பாற்றப்பட்டு விட்டதாக நினைத்துப் பூரித்தான்.

கொலைகாரன் மேற்கு நோக்கி "ஆண்டவரே, அன்புருவான அல்லாவே! நான் செய்யப்போகும் இந்தக் கொலைக்கு என்னை மன்னித்து பீஜப்பூர் வெற்றிக்கு அருள் புரிவீராக!" என்று வேண்டிக் கொண்டு இடுப்பிலிருந்த கத்தியை உருவினான். அன்று மட்டும் விசவகாத நாயக்கனும், ருக்மாங்கதனும் இருந்திராவிட்டால் ராயர் இறந்திருப்பார்; விஜயநகர சாம்ராஜ்ஜியம் அன்றோடு அஸ்தமித்திருக்கும்; மகமதியர் ஆதிக்கம் தென்னகத்தில் வேரூன்றியிருக்கும்.

பொழுது விடிவதற்குள் இந்தப் பொல்லாத செய்தி நகர் முழுதும் பரவிவிட்டது. மகமதிய வீரனொருவன் மன்னரைக் கொல்லச் சதி செய்ததை விசுவநாத நாயக்கன் கண்டு பிடித்துவிட்டான் என்று ஆடவரும் பெண்டிரும் கண்ட கண்ட இடங்களிளெல்லாம் பேசிக்கொண்டார்கள். அவர்களில் விசுவநாதனைப் புகழ்ந்து, மன்னரின் ஆயுளை வாழ்த்தாதவர்கள் இல்லை.

***

2

ரசவை கூடியது. லட்சோப லட்ச மக்கன் இதய பீடங்களில் ஆழப் பதிந்திருந்த கிருஷ்ணதேவ ராயர் கம்பீரமாக அவையில் அமர்ந்திருந்தார். கைது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/23&oldid=1507350" இலிருந்து மீள்விக்கப்பட்டது