பக்கம்:துங்கபத்திரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

சபையை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவன் கண்களிலிருந்து ரத்தம் ஆறெனப் பெருக்கெடுத்து ஓடியது.

"சக்கரவர்த்தி! சக்கரவர்த்தி! என் கண்களைப் பாருங்கள் பிரபு! இனி நான் வாழலாமா? புவியாளும் மன்னிவரே, கவி எழுதிப் பிழைக்கும் நான் எப்படி வாழ்வேன். நீதி கேளுங்கள்: அந்த நாசக்காரனை பழிக்குப் பழி வாங்குங்கள்" என்று அந்தக் குருட்டுக் கவிஞன் புலம்பினான். சபையில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அனுதாபம் தெரிவித்துக்கொண்டனர். மன்னர் ராயர் கண்கலங்கிப் போனார்.

"பெரியவரே! உம் நிலைகண்டு சபை ஆருத் துயர் அடைகிறது. அந்தக் கொடியவனைக் கண்டு பிடித்து கடுமையாகத் தண்டிக்க சபை உறுதி கூறுகிறது. நடந்ததைத் தெரிவியுங்கள்! குற்றம் களைய மன்றம் இருக்கிறது. சுற்றம் பாரா நீதிமான்கள் இருக்கிறார்கள். உங்களுடைய துயரத்தைத் துடைக்க, அரசாங்கம் பெருமுயற்சி எடுத்துக் கொள்ளும்: பெரு முயற்சி எடுத்துக் கொள்ளும்!" என்றார் ராவர்.

"ஆண்டவனே! நான் ஒரு ஏழைக் கவிஞன். அதுவும் மகமதியக் கவிஞன். நாங்கள் எங்கள் பாட்டன் காலத்திலிருந்து இந்த விஜய நகரத்தில்தான் குடி இருந்து வருகிறோம். எங்கள் குடும்பத்தில் இந்து முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லை; தெய்வத் திரு உருவே! இதுவரை நான் இந்த இந்து சாம்ராஜ்ஜியத்திற்குத் தீங்கு நினைத்ததில்லை. நேற்று அஸ்தமனத்திற்குப் பிறகு பகல் மேல் இருள் பூசிக் கொண்டிருந்த வேளையில் ஒரு தீயவன் என் இல்லத்திற்குள் நுழைந்தான். இடமனித்து அமரச் செய்தேன். 'கருப்பட்டி' என்றான் அவன். 'ஆம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/27&oldid=1507354" இலிருந்து மீள்விக்கப்பட்டது