பக்கம்:துங்கபத்திரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

"நல்ல வேளை நினைவுபடுத்தினாய். இப்படியே போனால் என் மகள் கைகொட்டிச் சிரிப்பாள். 'அப்பா இனிமேல் கொஞ்ச நாளைக்கு அம்மாவாகவே இருங்களேன்' என்பாள்."

"உங்களுக்குப் பெண் வேடம் மிகப் பொருத்தமாக இருக்கிறது; வயதே தெரியவில்லை."

"நானும் பெண் வேடம் போடாமல், நீயும் உனது சுய உருவத்தில் வந்திருந்தால் விசுவநாதன் நம்மைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுவிடுவான்: கதை கெட்டுவிடும். அவன் நம்மைப் பார்த்துவிட்டாலும் ஒன்றும் நியாமல் குழம்பவேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த வேலையைச் செய்தேன்."

"அரியகாதனும், துர்ஜதியும்தான் இந்த வேஷத்தில் வந்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்கவாவது முடியுமா?"

அரியநாதர் மாளிகையில் நடைபெற்ற இந்த உரையாடல் எவருக்கும் தெரியாமல் நிகழ்ந்தது. துர்ஜதி பெண் வேடத்தைக் களைந்து விட்டுப் புறப்பட்டார். தனது திட்டத்தின் முதற்படி வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவே அவர் பரவசப்பட்டுக் கொண்டார்.

5

"ங்கா...! கங்கா!"

கங்கா கதவைத் திறந்தாள்!

"ஏப்பா.இரவெல்லாமா.கவி எழுதினீர்கள்? வீட்டிலிருந்து எழுதக் கூடாதா?”–கங்கா குழக்கையைப் போல் கொஞ்சலாகக் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/51&oldid=1507888" இலிருந்து மீள்விக்கப்பட்டது