பக்கம்:துங்கபத்திரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

"கவியா எழுதினேன்? நாடகமல்லவா ஆடிவிட்டு வந்திருக்கிறேன். எல்லாம் உனக்காகத்தான் கங்கா! நெருப்பு வைத்துவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடித்து விடும். கண்ணே கங்கா1 வா மகளே உட்கார்!"

"என்னப்பா, நாடகம் என்கிறீர்கள். நெருப்பு என்கிறீர்கள், வெடிக்கப்போகிறது என்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்பா! சண்டையைப் பற்றிச் சக்கரவர்த்தி பாட்டு எழுதச் சொன்னாரா?"

"பைத்தியம்! பைத்தியம்! விசுவநாதன் காதல் காட்சி யைக் கையும் களவுமாகக் காட்டிக் கொடுத்துவிட்டேன். ஒருபோதும் சமானிக்க முடியாது. அவ்வளவுதான், அவன் தீர்ந்தான்! அவன் எதிர்காலம் பாழ்! அவனுடைய இன்பக் கனவுகள் தூள்! கங்கா குதூகலப்படு நலங்களியும் பாடல் புனையும் சைவப் பெரும் புலவன் நாசவேலை செய்ய ஆயத்தமாகி விட்டானே என்று நினைக்கிறாயா? நிகழ்காலம் என்னுடையது. என் காலத்தில் உளக்கு வாழ்வில்லையானால், எதிர்காலம் உள்ளைத் தின்றுவிடும்!" துர்ஜதியின் பேச்சில் ஜ்வாலை பறந்தது.

கங்கா வெகுளி; உணர்ச்சியின் அடிமை. திரும்பத் திரும்பக் குழைந்தாள். அந்தக் குழைவில் கவர்ச்சி இருந்தாலும், பொலிவிருந்தாலும் கன்னங் கபடமற்ற பேதைமை மேலோங்கி நின்றது.

"ஏப்பா என்னைக் காட்டிலும் இளவரசி அழகா? என்னைக் காட்டிலும் சிவப்பா? நிறைய நகை போட்டிருக் தானா? கூந்தல் வெகு நீளமோ?"–சிறிதும் வினயமில்லாமல் சிரித்துக்கொண்டே கேட்டாள்.

"அவளை யார் பார்த்தது ?"- துர்ஜதி சொன்னார்.

"என்னப்பா, முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறீர்கள்? கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்துவிட்டேன், என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/52&oldid=1507889" இலிருந்து மீள்விக்கப்பட்டது