பக்கம்:துங்கபத்திரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

"அதோ பாருங்கள் சுவரில் ஒரு சித்திரம் இருக்கிறது. நிலவு போன்ற கண்கள் மலர்ந்திருக்கின்றன. அதைத்தான் கேட்டேன்" என்றான் சிங்கராயன்.

"அருமையான கற்பனை!" என்று சிரித்தார் துர்ஜதி. அவரருகில் நின்ற கங்கா அதைப் புரிந்துகொண்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். தான் ஒரு அழகி என்ற கர்வம் அவள் தலையைக் கனக்க வைத்துவிட்டது. பெண் படைப்பு, ஆடவர்களுக்கு நேர்மாறான படைப்பு. ஆடவனை மயக்க, அவன் உள்ளத்தைப் புகழ வேண்டியிருக்கிறது. பெண்ணை மயக்க, அவள் உருவத்தைப் புகழ்ந்தால் போதும். நல்லவன் என்று பெயர்பெற ஆடவன் விரும்பினால், அழகி என்று பெயர் பெற பெண் விரும்புகிறாள். ஒன்றுக்கொன்று எவ்வளவு வேறுபாடு!

சிங்கராயன் கங்காவைப் புகழ்ந்தது அவள் தலையில் பனிக்கட்டியைத் தூக்கி வைத்தது போல் இருந்தது.அவள் உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. மின்னற்கொடி போல் ஓடி மறைந்துவிட்டாள்.

***

6

துரைக்குச் சென்ற நாகமநாயக்கர் அபரியித வெற்றி அடைந்தார். சோழப் படையை வென்று, வீரசேகரனைக் களத்திலேயே கொன்றுவிட்டார். செழுமை மிக்க சோழ நாட்டை விஜயநகரின் காலடியில் படைத்து ராயர் மைத்துனன் செவ்வப்பரை பிரதிநிதியாக்கினார் நாகம நாயக்கர். பாண்டியனுக்குப் பதி கிடைத்தது. ராயர் மகிழ்ந்தார். சிப்பந்திகளுக்கு இன்பத் தொகை அளித்தார். விஜயநகர் முழுதும் வெற்றி விழாக் கொண்டாட வேண்டுமென்று அவர் தீர்மானித்தார். ஆனால் அவர் எதையும் நினைத்தவுடன் நினைத்தபடி செய்து விடுவதில்லை. அஷ்ட கஜங்களின் ஆலோசனையை அவர் மீற மாட்டார்.

அல்லாசானி பெத்தன்னா தலைமையில் நந்திதிம்மன்னா, துர் ஜதி,மாதய்யகாரி மல்லன்னா, பிங்கள சூரன்னா முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/56&oldid=1509797" இலிருந்து மீள்விக்கப்பட்டது