பக்கம்:துடிக்கும் இளமை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பதில்லை என்று விளக்கியிருக்கிறோம். சிலப்பதி காரம் போன்ற தமிழரின் செல்வங்கள் செல்வங்கள் புதை பட்டுக் கிடக்கும்போது தமிழனை அரக்கனெனக் கூறும் கம்பராமாயணத்துக்கேன் விழா நடத்து கிறார்கள் வீணர்கள் என்று வினவியதுண்டு. நாம் அப்படி வினவியது சிலப்பதிகாரத்தின் மீது நமக் கேற்பட்ட பக்தியல்ல, பகவத் உணர்ச்சியுமல்ல. அல்லது அதிலே காணப்படும் அளவுக்கு மீறிய கற்பனைச்செய்திகளல்ல. தமிழர்களுடைய வாழ்க் கைமுறை சிலப்பதிகார காலத்தில் எப்படியிருந்தது என்பதை விளக்கும் நூலாக சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறது என்பதற்காகவும், வடநாட்டா ரின் முடிநெறித்த திராவிட வீரர்களின் சிறப்பு காணப்படுகிறது அதிலே என்கிற காரணத்தாலும் நீதிக்காக வாழ்ந்த திராவிட மன்னர்களின் பெருமை கூறப்படுகிறது அதிலே என்கிற ஆர்வத் தாலும் கண்ணகி யென்கிற பாத்திரம் கற்பனைக் கெட்டாத செயல்களை செய்தாள் என்பதை நம்பா விட்டாலும் அக்காலப் பெண் மணிகளின் துணிவு சித்தரிக்கப்பட்டுள்ள தன்மையை அறிந்துகொள் கிற வாய்ப்பு அதிலே இருப்பதாலும், சேர,சோழ, பாண்டியர் மூவருடைய ஆட்சிபற்றிய விபரங்கள் தெரிந்துகொள்ளும் அரிய நூல் அது என்பதா லும் சிலப்பதிகாரத்தை நாம் ஆதரிக்கிறோமே தவிர வேறில்லை. திருக்குறளை ஏன் போற்றுகிறோம். தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்பதற்காகவா? இல்லை ;