பக்கம்:துணிந்தவன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 93 இன்னும் பலரும் பேசினார்கள். முடிவில் மாதவன் 'நடிக சாம்ராட் ஆனான். குமாரி சம்பாவுக்கு 'கலை உலக கோஹினூர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. 'நம்ம புகழ் மேலும் ஒருபடி உயர்ந்து விட்டது. பேஷோ பேஷ் என்ற மகிழ்ச்சி மாதவனுக்கு. அருமையான பப்ளிஸிட்டி வருங்காலத்திலே நல்ல லாபம் கிடைக்கும்’ என்ற திருப்தி பரப்பிரம்மத்துக்கு. குமாரி சம்பா மாதவனிடம் மேலும் அதிகமான பற்றுதல் கொண்டாள். இந்தப் பெருமை எல்லாம் இவரால் தானே நமக்கு வந்தது!’ என்று உளம் பூரித்த அந்தக் கொடி அவனைச் சுற்றிச்சுற்றி வந்தது. சிறப்புடன் திகழ்ந்தது. மாதவனுக்கு தினந்தோறும் நிறையவ்ே தபால் வரும். அவனுக்கு வருகிற கடிதங்கள் மூலம், நாட்டிலே பைத்தியங்களும், அசடுகளும், முட்டாள்களும், சினிமா வில் நடிக்கத் தவிக்கிற நபர்களும் எவ்வளவு பேர் இருக் கிறார்கள் என்பது ஓரளவு விளங்கும். அக்கடிதங்களைப் படிப்பது அவனுக்கு ரசமான பொழுது போக்காக அமையும். அன்றும் அவன் அவ்வாறே கடிதங்களைப் படித்து ரசிக்கத் தொடங்கினான். ஆனால் அவன் எதிர்பாராத கடிதம் ஒன்று அகப்பட்டு, அவனது உணர்ச்சிகளை உலுக்கிவிட்டது. காந்திமதி எழுதிய கடிதம் அது. அதைப் படிக்கும் போதே அவன் கைகள். நடுங்கின. அவன் உள்ளம் கன மேற்றது. தேதி இடப்படாத அக்கடிதம் உணர்ச்சிக் கொந் தளிப்போடு எழுதப்பட்டிருந்தது. அங்கங்கே எழுத்துக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/105&oldid=923463" இலிருந்து மீள்விக்கப்பட்டது