பக்கம்:துணிந்தவன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 GG ’துணிந்தவன் 'இப்ப தலைமுடியைக்கூட வளர விட்டிருக்கிறே. இரட்டைச் சடை..... பேஷ் பேஷ்' அவன் புகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ச்சிதான் அடைந்தாள் அவள். 'பாலச் சந்திரன் என்ன செய்கிறான்? எப்படி இருக்கிறான்?" 'அவன் சாந்திநிகேதனுக்குப் போயிருக்கிறான். படிப்பதற்காக." 'ஏனாம்? இங்கே உள்ள படிப்பெல்லாம் பிடிக்க லியாமா அவனுக்கு என்று கிண்டலாகக் கேட்டான் மாதவன். 'அப்பாதான் அவன் அங்கே போய் படிக்கட்டு மேன்னு அனுப்பி வைத்தார்.” 'அது சரி. பணம்தான் இருக்குதே. அவன் அமெரிக்காவுக்கே போய்ப் படிக்கலாம். உம், உனக்கு எப்ப கல்யாணம்? அல்லது, இதற்குள்ளாகவே ஆயிட் டுதோ: 'போங்கோ லார் வெட்க மிகுதியால் முகம் கவிழ்ந்தாள் அவள். அம் முகத்தில் பரவிய ஆனந்தமும் நானமும், அது குவிந்த விதமும் ரசிக்க வேண்டியன வாக அமைந்தன. அவள் திடுமெனத் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தாள். 'சினிமாவிலே நடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாளாக ஆசை. எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்களேன்' என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/112&oldid=923471" இலிருந்து மீள்விக்கப்பட்டது