பக்கம்:துணிந்தவன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிந்தவன் 'ரொம்ப சந்தோஷம்" என்று உணர்ச்சி செத்த குரலில் பேசினான் மாதவன். அவனுடைய சிரத்தையின்மையை உணர்ந்து காந்திமதி வேதனைப்பெருமூச்சு உயிர்த்தாள். 'நான் சந்தோஷம் அடைய முடியவில்லை, அத்தான். நீங்களும் நானும் எவ்வளவோ எண்ணினோம். ஆசைப்பட்டு எதிர்பார்த்தோம்...." ‘'எதிர் பார்க்கிறவர்கள் ஏமாறுவதும், ஆசைக்குப் பங்கம் ஏற்படுவதும் வாழ்க்கையில் சகஜம் தானே, காந்திது" அவன் அவள் முகத்தில் படபடக்கும் விழிகளை திர்நோக்க விரும்பாமல் புதிய இவை ஒன்றில் பட்டு, ளபளத்துச் சிதறுகின்ற வெள்ளி நிலவொளியைக் .ர்ந்து கவனித்தான். அவள் மார்பு விம்மித் தணிந்தது. 'அத்தான், உங்களுக்கு என்னிடம் ஆசை இல்லையா?' என்று உருக்கமாகக் கேட்டாள் அவள். 'அப்படி நான் சொல்லவில்லையே!” 'பின் ஏன் இப்படி விரக்தியோடு பேசுகிறீர்கள்?" காந்தி, என் விரக்திக்கும் வேதனைக்கும் வெறுப்புக்கும் இதுதான் காரணம் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? எனக்கு எல்லோர் மீதும், எல்லா வற்றின் பேரிலும் பெரும் வெறுப்பு....” 'என் மேல் கூடவா? என்ற கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. அது வெடித்துவிட்டதும் அவன் திகைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/20&oldid=923491" இலிருந்து மீள்விக்கப்பட்டது