பக்கம்:துணிந்தவன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 24 முன் அறையில், நன்கு விளைந்த தக்காளிப் பழத்தை ஞாபகப்படுத்தும் மேனி மினுமினுப்போடு ஈஸிசேரில் சுகமாகச் சாய்ந்திருந்தார் பெரியவர். அவர் தான் உயர்திரு. பவானந்தமாக இருக்கவேண்டும் என்பது முதல் பார்வையிலேயே அவனுக்குப் புரிந்தது. அவன் திண்ணையில் அடி எடுத்துவைத்ததும் அவர் திரும்பி அவன் பக்கம் பார்வை வீசினார். 'யார்? என்ன விஷயம்?' என்று கேட்பது போல் தலையை ஆட்டினார். > 'விளம்பரத்தில் கண்ட படி....... $ 4 மாதவன் பேச்சை ஆரம்பித்துமே, அவர் வெடுக் கெனச் சொன்னார் 'சரி சரி, கொஞ்ச நேரம் அங்கே நில்லு!’ என்று. - அவனுக்கு ஆத்திரம் வந்தது. பண மமதை வாய் திறந்து விசாரிக்க முடியவில்லை, பாரேன். பேசத் தொடங் கினால், அதை முழுதும் கேட்கக் கூடவா முடிய வில்லை?” அவன் மனக்குறளி முனங்கியது. அப்படி அவர் பிரமாதமான வேலை எதுவும் செய்து கொண்டிருக்கவில்லை. அப்போது. பத்திரிகை படிப்பது போல் சும்மா பாவனை பண்ணுகிறார் என்று தான் மாதவ னுக்குப் பட்டது. தேடிவந்தவனை- அதிலும் வேலை கேட்டு வருகிறவனை - உடனடியாக விசாரித்து விட்டால் அப்புறம் பணம் படைத்த மோனுக்கு மதிப்பு என்ன இருக்கப் போகிறது? அவர் கெளரவம் இது போன்ற சமயங்களில் தானே கொடி கட்டிப் பறக்க முடியும் என்று அவன் எண்ணினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/33&oldid=923505" இலிருந்து மீள்விக்கப்பட்டது