பக்கம்:துணிந்தவன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 துணிந்தவன் 'சொல்லுங்களேன் பார்ப்போம்' என்று சவால் விட்டாள் அவள். 'சொல்ல முடியாது.” 'ஏஹே, தெரிஞ்சாத்தான் சொல்லுவீங்களே. உங்களுக்குத் தெரியாது. அதுதான் என்று சொல்லிச் சிரித் தாள் அச்சிறுமி. 'அப்படியானால் என் பெயரும் உனக்குத் தெரி யாது என்று தான் சொல்லணும்.' 'எனக்கா தெரியாது? உங்க பெயரு மாதவன் மிஸ்டர் மாதவன்!" 'உன் பெயர் வந்து....' 'ஏஹே, தெரியாதே! தெரியாதே... ஸார் ஸார் - மொளக்கு லார் . கம்பளி மொட்டை டேக்கு ஸார் . வீண் ஜம்பம் பேசுறார்!" அவளுக்கு உற்சாகமாவது உற்சாகம் துள்ளினாள், குதித்தாள், சுற்றிச் சுழன்று பம்பரம் மாதிரி ஆடினாள். ஆடி ஆடி அவன் அருகேயே வந்து விட்டாள். அவள் கூத்தாட்டம் சிறிது ஒடுங்கியதும் மாதவன் சொன்னான்: 'உன் பேரு பேபி. ஆமாம். பேபிதான்!” அவள் ஆச்சர்யத்தால் வாய் பிளந்து, ஆடாமல் அசையாமல் பொம்மை மாதிரி நின்று விட்டாள். பிறகு, 'உங்களுக்கு எப்படி ஸார் தெரியும்?' என்று கேட்டாள். 'தெர்ர்ரியும்' என்று அவளைப் போலவே பேசிக் காட்டினாள் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/40&oldid=923513" இலிருந்து மீள்விக்கப்பட்டது