பக்கம்:துணிந்தவன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - துணிந்தவன் முதலிய பல பிரதேசங்களிலும் கூட பெற்றோர்கள் தங்கள். முதல் பெண்ணை, அல்லது ஏதாவதொரு பெண்ணை, பேபி என்றே அழைக்கிறார்கள். பேபி என்ற பெயரில் அவர்களுக்கு அவ்வளவு மோகம்....' அவன் பேசுவதை அசையும் உதடுகளையே வியப்புடன் கவனித்து நின்ற பேபி குபுக்கென்று சிரித்தாள். - 'என்ன? இப்ப என்ன சிரிப்பு?" என்று அவன் விசாரித்தான். 'நீங்கள் புத்தகம் மாதிரிப் பேசுகிறீர்களே, சாதாரணப் பேச்சா இது!" "நான் ரயில் மாதிரி - எக்ஸ்பிரஸ் ட்ரெயின் மாதிரி நடப்பதாக ஒருவர் சொல்வது வழக்கம். நீ என்னடான்னா இப்படிச் சொல்கிறே..." : 'ரயில் மாதிரி எப்படி நடக்க முடியும்?" 'அதாவது, வேகமாய் - ரொம்ப வேகமாய் . ஜிகு ஜிகு ஜிகு ஜி.குன்னு....' அவன் வெறும் சொல்லுடன் நின்று விடாமல், வேகமாக எழுந்து அதிவேகமாக நடந்து காட்டலானான். அப்பொழுது அவனே ஒரு 'விளையாட்டுப் பிள்ளை' யாகிவிட்டான். பேபிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. வயிற் றைப் பிடித்துக்கொண்டு குனிந்து குனிந்து சிரித்தாள். தரை யில் விழுந்து உருண்டு புரண்டு சிரித்தாள். சிரிப்பால் அவள் முகம் செக்கச் சிவந்தது. கண்களில் நீர் தேங்கியது. 'போதும் ஸ்ார்... வயிறு வலிக்கு தே.... போதுமே” என்று சொல்லிக்கொண்டு சிரித்தாள். * *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/42&oldid=923515" இலிருந்து மீள்விக்கப்பட்டது