பக்கம்:துணிந்தவன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிந்தவன் 6 2 'நீங்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது. எனக்கு உரிமைகள் நிறையவே இருந்தாலும், நான் சுதந்திரமான வள் அல்ல. ' 'எவர் பேச்சையும் நான் தவறாகக் கருதுவது கிடையாது. மேலும், நமக்குள் சமாதானங்களும், காரண காரிய விளக்கங்களும் தேவை இல்லை' என்று தீர்மான மாகத் தெரிவித்தான் மாதவன். சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான் அவள். பிறகு உங்களுக்கு சினிமா உலகத்தின் மீது வெறுப்பு எதுவும் கிடையாதே?' என்று கேட்டாள். மாதவன் நல்ல தமாஷை அனுபவிப்பதுபோல் உரக்கச் சிரித்தான். அவள் விஷயம் புரியாதவளாய் என்ன? ஏன் சிரிக்கிறீர்கள்?' என்றாள். 'இந்த உலகத்தில் உள்ள சகலவற்றின்மீதும் எனக்குத் தீவிரமான வெறுப்பு உண்டு. சினிமா உலகம் மட்டும் விதிவிலக்கா என்ன?” 'ஏன் கேட்கிறேன் என்றால், சினிமா உலகத்தில் ஈடுபட்டு உழைக்க நீங்கள்....” 'வாய்ப்பு கிடைத்தால் எந்த உலகத்திலும் எந்த வேலையானாலும் பார்க்க நான் தயார். நரகலோகத் துக்குப் போகவேண்டுமானாலும் நான் மகிழ்ச்சியோடு போவேன். ' 'சினிமா உலகம், வாழத் தெரிந்தவர்களுக்கு சொர்க்கபூமியாகத்தான் இருக்கிறது. நீங்கள் வீணாக நரகத்தின் பேச்சை எடுக்க வேண்டாம் என்று கூறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/74&oldid=923550" இலிருந்து மீள்விக்கப்பட்டது