பக்கம்:துணிந்தவன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 67 அவனுக்கும் புதிதாக ஒரு சிநேகிதி கிடைத்து விட்டாள். அந்தக் கம்பெனியின் இரண்டாவது படத்தில் நடித்துக்கொண்டிருந்த குமாரி சம்பா மாதவனின் தோற்றத் தாலும், பேச்சினாலும், குணத்தினாலும் வசீகரிக்கப்பட் டாள். அவனும் அவளும் படத்தில் ஜோடிகளாக நடித் தனர். எங்கும் எப்பொழுதும் ஜோடியாகக் காட்சி அளிக்க லாயினர். குமாரி சம்பா வேறு கம்பெனிப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தாள். கதாநாயகி பார்ட் அவளுக்கு அளிக்கப்படுவதில்லை. பிரபல நட்சத்திரங்களுக்கே அத்தகைய வேடமெல்லாம் ரிஸர்வ் செய்யப்பட்டிருந் தன. ஆயினும், கதாநாயகிக்கு அடுத்தபடியான பாகங்கள் அவளுக்குக் கிடைத்தன. பணமும் தராளமாக அவளிடம் சேர்ந்தது. மாதவனிடமும் ஆயிரக்கணக்கில் பணம் புரளத் தொடங்கியது. அவன் உடைகளில் மாறுதல் ஏற்பட்டது முதலில். கழுத்தில் தங்கச் சங்கிலியும் விரலில் மோதிரம் ஒன்றும் கொலு விருந்தன. அவனிடமிருந்து இனிய வாசனை அலைகள்பரவின. சம்பாவோ வாசனைக் குளத் திலே மூழ்கி எழுந்தவள் போல, நெஞ்சில் கனல் மணக்கும் சுகந்தப் பதார்த்தமாகவே திரிந்தாள். மாதவன் சிறிதுசிறிதாகப் பிரயோகித்த போதனை கள் சரியானபடி வேலை செய்தன: 'சம் பா, நீ ஏன் இப்படி இரண்டாந்தர, மூன்றாந்தர வே ஷங்களையே ஏற்று நடிக்க வேண்டும்? கதாநாயகியாக நடிக்கும் ஸ்டார்கள். உன்னைவிட என்ன உயர்ந்துவிட்டார்கள்? அவர்களிடம் இருப்பதைவிட அதிகமான திறமையும், கவர்ச்சியும், இளமையும் உன்னிடம் இருக்கின்றன. நீ முதல்தர ஹீரோயின் ஆக நடிக்க முடியும். சுலபத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/79&oldid=923555" இலிருந்து மீள்விக்கப்பட்டது