பக்கம்:துணிந்தவன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 74 அதட்டி விட்டானே என்ற நினைப்பு அவர் தேகத்தைப் படபடக்க வைத்தது. மாதவனோ வெறிபிடித்தவன்போல் பேசினான்: 'முப்பத்திரண்டு வருஷகாலம் நானும் குடும்பப்பெருமை, முன்னோர் கெளரவம், தருமம் நியாயம் என்றெல்லாம் பயந்து பயந்துதான் வாழ்ந்தேன். அப்போ தினம் வயி றாறச் சாப்பிடக்கூட முடிந்ததில்லை என்னால், சாப்பாடு கிடைக்கலே. செலவுக்குக் காசு கிடையாது. எவனும் கடன் தரவும் துணியலே, நான் நல்லவனாகவே வாழனும் என் அப்பா பெயரும், தாத்தா நினைவும் சீர் குன்றாமல் இருக்கணும் - என்கிற எண்ணம் உண்மையாகவே உமக்கு இருந்திருக்குமானால், நீர் எனக்கு உதவி செய்திருக்க முடியாதா, என்ன? காந்திக்கு பணக்கார இடமாகத் தேடி அலைந்திருப்பீரா? இப்ப நான் ஜாம் ஜாம்னு வாழ்கிற போது, என்னைப் பழித்துப் பேச வந்துவிட்டீரே!.... அவன் தன்னை மறந்த நிலையிலே கத்திக்கொண் டிருந்தான். அவனைச் சுற்றிலும் சிறுகும்பல் கூடிவிட்டது. 'அப்பா என்ன இது? என்ற குரல் அவனைத் திடுக்கிடச் செய்தது. பிள்ளை அவர்களுக்கும் உணர் ஆட்டியது. மாதவன் எதிரே பார்த்தான். காந்திமதி, இடுப்பில் ஒரு குழந்தையுடன் நின்றாள். தன் குழந்தையின் கையைப் பற்றியபடி அவனையே கூர்ந்து நோக்கி நின்றான். "மாமா என்ன விஷயம்?' என்று கேட்டபடி, அவள் கணவன் அம்பலவாணனும் அங்கு ஆஜரானான். அவன் கையில் ஒரு குழந்தை இருந்தது. அவன் மாதவனை முறைத்துப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/83&oldid=923560" இலிருந்து மீள்விக்கப்பட்டது