பக்கம்:துணிந்தவன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 75 அவற்றிலே. கம்பீரத் தோற்றமுடைய குதிரை ஒன்று வாங்கினான். கறுப்பு நிறக்குதிரை. மினு மினுக்கும் உடல் வனப்பு. எடுப்பான வளர்ச்சியும் மிடுக்கானநடையும் பெற்றிருந்த அது சும்மா நடந்துபோனாலே, எல்லோரும் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள். அத்தகைய கவர்ச்சி பெற்று அழகான குதிரை அது. அதன் நெற்றியில் எழிலான திலகம்போல சிறிது வெண்மை படிந்திருந்தது. மாதவன் குதிரையேற்றம் பயின்று, தகுந்த தேர்ச்சி பெற்றதும், ஒரு நாள் தனது புதிய ஆடையை அணிந்து கொண்டு குதிரைமீது பவனிவந்தான். பட்டணத்தின் முக்கியiதிகளில் எல்லாம் காணப்பட்டான். ஜனநட மாட்டம் அதிகமுள்ள இடங்களில் எல்லாம் அவன் ஜம் மென்று குதிரை சவாரி செய்தான். எல்லோர் கண்களும் அவன் மீதே மொய்த்தன. தெருவில் நடந்தவர்கள் நின்று பார்த்தார்கள். வீடுகளில் வாசற்படியில் நின்றவர்கள். ஆச்சர்யமாகக் கவனித்ததோடு, உள்ளேயிருந்தவர்களுக்கும் செய்திகூற, ஜன்னல்களின் பின்னும் மொட்டைமாடிகளிலுள் வேடிக்கை பார்க்கும் முகங்கள் பூத்தன. பிரமாதமான ஓர் காரியத்தைச் செய்துவிட்ட திருப்தி நிறைந்தது அவன் உள்ளத்திலே. அன்று முதல் மாலை வேளைகளில் அவ்விதம் பவனிவருவதை வழக்கமாக்கிக் கொண்டான் அவன். அத்துடன் மாதவன் திருப்தி அடைந்து விட வில்லை. அருமையான சாரட்டு வண்டி ஒன்று செய்து முடித்தான். ஜோரான இரண்டு வெண்புரவிகள் வாங்கி னான். அவ்வண்டியில் அவனும் சம்பாவும் உல்லாசமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/87&oldid=923564" இலிருந்து மீள்விக்கப்பட்டது