பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

109


போலத்தானே ஆகும்?" என்று பலவிதமாக எண்ணி நெய்சம் நைந்தாள். தன் மன நிலையை அவள் வெளிக்குக் காட்டவில்லையே தவிர, உள்ளுக்குள் மட்டும், 'மங்கை வருவதென்பது சந்தேகம்தான். வந்த பிறகே நிச்சயம்' என்று எண்ணிக் கொண்டிருந்தாள். இந்நிலையில் கணவன் கேட்ட கேள்வி அவள் மனதை வாள் கொண்டு அறுத்தது.

"என்ன அப்பா, அப்படிக் கேட்கிறீர்கள்?" என்று இடைமறித்தாள் கோகிலா.

பிள்ளையவர்கள் மகளை நோக்கி, "இல்லையம்மா, சித்தி திரும்பி வருவாள் என்று எனக்கென்னமோ நிச்சயமில்லை" என்றார்.

கோகிலா, "அப்படி நினைக்காதீங்க, அப்பா! தம்பிக்கு அசௌக்கியம் என்றதும், அலறியடித்துக் கொண்டு வரப் போகிறங்க, பாருங்களேன்!..."

"உம். பார்க்கலாம்!" என்று பெருமூச்சு விட்டவாறே சொன்ன பிள்ளையவர்கள், மங்கைக்கு கணேசன்மீது உசிர்தான், ஆனாலும்..." என்று இழுத்தார்.

திலகவதி திடீரென எழுந்து பின்பக்கம் போகலானாள். தத்தையும் மகளும் பேசும் பேச்சைக் கேட்க அவளுக்குப் பிடிக்கவில்லை. இக்குறிப்பை ஒரு நொடியில் உணர்ந்து கொண்ட, பிள்யைவர்கள் தாம் பேசவந்த பேச்சை அத்துடன் நிறுத்தலானார். மேலும் தாம் அங்கிருந்தால் மகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியதிருக்கும் என்று கருதி அவர் மெல்லத் தம் இருப்பிடத்துக்குப் போனார்.

இச்சமயும் விசுவநாதன் தன் அறையிலிருந்து பரபரப்பாக வெளியே வந்தான்.

இது கண்டு, "என்ன!" என்று வினவிய பிள்ளையவர்கள் நின்று எதையோ உற்றுக் கவனிக்கலானார். "ஏதோ வண்டி