பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

தும்பைப்பூ


வந்து நிற்கிறாப் போலிருக்கே! யார் வருகிறது பார், விசுகம்?" என்று கூறிவர்.

"இதோ போகிறேன், அப்பா!... நம்ம வீட்டுக்கா? வண்டி வருகிறதைப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். ஒரு வேளை.. சித்திதான்......"

விசுவநாதன் பேசி முடிப்பதற்கு முன் கோகிலா மேல் மூச்சு வாங்க ஓடோடியும் அங்கு வந்து, அப்பா! அப்பா! சித்தி வந்துட்டாங்க, அப்பா!" என்று கூறிக் குதிக்கலானாள்.

"என்ன!" என்று வியப்போடு கேட்டவாறே வெளிப் பக்கம் நோக்கினார் பின்ளையவர்கள்.

"ஆமாம்; அப்பா! சிந்திதான் வருகிறார்கள், அண்ணனுடன்......"

விசுவநாதனும் கோகிலமும் கூறியபடி, சிவகுமாரன் பின்னே வர மங்கையர்க்கரசி முன்னே விரைந்து வந்து கொண்டிருந்தாள்.

எதிர் பாராதபடி ஏற்பட்ட சந்தடி கேட்டுத் திலகவதி பின்புறமிருந்து வந்தாள்.

சதானந்தம் பிள்ளை, "வா, அம்மா!" மங்கை என்று மங்கையை வரவேற்றார்.

அத்தானைக் கண்டதும் மங்கை நாணத்தால் ஒரு கணம் தலை குனிந்தவாறு தயங்கி நின்ருன், ஆயினும் கணேசன் மீதுள்ள பரிவுணர்ச்சி அவளை உந்தித் தள்ளியது. ஆகவே அவன், "குழந்தைக்கு என்ன உடம்பு, அத்தான்?" என்று துயரக் குரலில் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

அவளுடைய தாய்மை யுணர்ச்கியைக் கண்டு சதானந்தம் பிள்ளை திகைத்து நின்றார்.

"வாங்க, சித்தி!...... எங்கே வராம போய்விடுவிங்களோன்னு..." என்று கூறிக்கொண்டே அவளை எதிர்கொண்டு