பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தும்பைப் பூ


கிழித்து விட்டான், நீ பெற்ற பிள்ளையின் பவிஷு இதோ பத்திரிகையில் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.........."

திலகவதி விஷயத்தைப் புரிந்து கொள்வதற்கு முன் மங்கை தெரிந்து கொண்டாள்.

"அப்போ சிவாவின் நெம்பர் பேப்பரிலே வரவில்லையா? இவன் பெயிலாகி விட்டானா, என்ன?" எனத் திடுக்கிட்டவாறு கேட்டாள் திலகவதி.

"ஜோஸியன் எவனாயினும் போகிறானா? பார்! தக்ஷிணை வைத்துக் கேட்போம்.........." என்று பிள்ளையவர்கள் ஏளனத்துடன் சொன்னார்.

"என்ன சிவா? நீ பரீட்சையிலே ........" என்று திலகவதி மகனை நோக்கிக் கேட்டு நிறுத்தினாள்.

சிவகுமாரன் முகத்தைக் கீழே கவிழ்த்துக்கொண்டான்.

இதைக் கவனித்த மங்கை, ஐயோ! சிவன் எப்படிக் ரூன்றிப் போயிருக்கிரன்? இவன் பரீட்சைக்கு இராத்திரி யெல்லாம் கண்விழித்துப் படித்தானே! எப்படி பாஸாகாமல் போய்விட்டது?' என்று எண்ணி வருந்தினாள்.

இந்தச் சமயத்தில் வெளி வராந்தாவிவிருந்து, "அண்ணா இருக்காங்களா?" என்று யாரோ குரல் கொடுத்தார்கள்.

எதிர் அறையிலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த விசுவநாதன் யார் என்று வெளிவந்து பார்ப்பதற்குள், பிள்ளையவர்கள், யார் அது? என்று பதிலுக்குக் குரல் கொடுத்தார்.

"ஓ! இருக்கிறீர்களா? நான்தான் மாசிலாமணி" என்று சொல்லிக்கொண்டே, மாசிலாமணி முதலியார் உள்ளே வந்தார்.

அவர் குரலைக் கேட்டபோதே, திலகவதி அவ்விடத்தை விட்டு அகன்றாள், அதற்கு முன்பே - மங்கை சமையற்