பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

123


இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், அண்ணா எங்கெங்கு என்ன நடக்கிறது? யார் யார் என்ன செய்கிறார்கள்?’ என்று எனக்கு இருந்த இடத்திலிருந்தே எல்லாம் தெரியும்...... ' என்றார்.

சதானந்தம்பிள்ளை, "அதுதான் எனக்கு நன்றாகத் தெரியுமே! நீங்கள் நாரதர்போல் சர்வலோக சஞ்சாரி; சகலமும் அறிந்தவர் என்று..." தமாஷாகக் கூறிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.

"ஆனால் அண்ணா! நாரத முனிக்குள்ளதாகச் சொல்லும் கலகஞ் செய்யும் குணம் மட்டும் எனக்குக் கிடையாது....”

"இருந்தால்தான் என்ன! நாரதர் கலகம் நன்மையிலே முடியும் என்று சொல்வார்களே? அதுபோல, நீங்கள் செய்கிற கலகமும்..."

"நன்மையாக முடியுமோ, தீமையாக முடியுமோ! குண்டுணித்தனம் செய்து ஒருவர் சிண்டை மற்றொருவருடன் முடி போடும் மோசமான குணம் எங்கள் வீட்டு வேலைக்காரிக் குக்கூட கிடையாது. அண்ணா! நீங்கள் நிச்சயமாக நம்புங்கள்......"

"நான் உங்களைப்பற்றி எப்போதேனும் எதற்காயினும் சந்தேகித்ததுண்டா? திடீரென உங்களுக்கு ஏன் இப்போது அந்த விசாரம் வந்தது!...”

சிவன் பேச்சிலிருந்து தொடங்கி இப்படி ஏதோ ஒரு தினுசாகப் பேச்சு வந்து முடிந்திருக்கிறது. அது போகட்டும். நாம் எதைப்பற்றி முதலில் பேச்சை ஆரம்பித்தோமோ அவ்விஷயத்துக்கு வருவோம்...”

சதானந்தம் பிள்ளை எதையோ நினைவு கூர முயல்பவர் போல, முகத்தில் சிந்தனை ரேகையைப் படர விட்டு,

எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் ..!" என்று கேட்டார்.