பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

தும்பைப் பூ

 போகச் செய்தார். அவனை எதிரில் வைத்துக் கொண்டே அவனைப் பற்றி வானளாவப் புகழ்கிறாரே! இங்கிதந் தெரியாத மனுஷன் என்று அவருக்கு வருத்தமுண்டாயிற்று. அவருடைய மனக் குறிப்பையறியாத மாசிலாமணி முதலியார், நான் கேள்விப்பட்ட வரை சிவன் தன் வகுப்பிலே எல்லாவற்றிலுமே முதன்மையாக விளங்கிக் கொண்டிருந்தாளும். அவன் விசேஷ பாடமாக எடுத்துக் கொண்டுள்ள பூத பெளதிக சாஸ்திரத்தில் மேதாவிலாசத்துடன் இருந்தான் என்று சொல்லுகிருர்கள். அப்படியிருக்க, அவன் பரீடசையில் பாஸாகவில்லையென்றால், அதில் ஏதோ சூது நடந்திருக்கிறது. கடைசியில் நான் கேள்விப்பட்டது சரியாகத்தான் போய் விட்டது..."

சதானந்தம் குறுக்கிட்டு, "இதில் என்ன முதலியார்வாள் சூது நடந்திருக்க முடியும்? நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள்?...... யார் என்ன சொன்னார்கள்?...... "

மாசிலாமணி, உங்களுக்கு உலகமே ஒன்றுந் தெரியாது. வெளுத்த தெல்லாம் பால் என்று எண்ணும் சுபாவமுள்ளவர்களுக்குச் சூதும் வாதும் எங்கே தெரியப்போகிறது? எல்லா ரையும் உங்களைப்போலவே பரப்பிரமம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்...நான் சொல்லுகிறேன். சிவனைப் பெயிலாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு யாரோ சிலர் பரீ௸திகாரிகளைப் பார்த்து வேலை செய்திருக்கிறார்கள். உங்களுடைய அரசியல் விரோதிகள் மட்டுமல்ல; சிவனுடைய தீவிரப் போக்கு பிடிக்காத கல்லூரி நிர்வாகிகள் சிலர் கூட இவனைக் கவிழ்க்கும் சூழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடில் எல்லாப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கக்கூடிய மாணவனை நன்றாக விடையெழுதியுள்ள மாணவனைப் 'பெயி'லாக்க முடியுமா? நான் சொல்வது பொய்யென்றால், நீங்கள் அவன் எழுதியுள்ள விடைத்தாள்களை வாங்கிப் பாருங்கள்' என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.