பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

127

 இது கேட்டு சதானந்தம் பிள்ளை பிரமை பிடித்தவர் போல் உட்கார்ந்து விட்டார். மாசிலாமணி முதலியார் சிவகுமாரனைப் பற்றி நல்ல விதமாக அபிப்பிராயஞ் சொல்லத் தொடங்கியதுமே, மகிழ்ச்சியும், திருப்தியும் கொண்டு அடுக்களை வேலையைக் கவனிக்கப் போய் விட்ட மங்கை இச்சமயம் திரும்பி வந்தாள். திலகவதி மிகக் கவனமாகக் கூடத்தில் அமர்ந்து பேசுபவர்களுடைய பேச்சைக் கேட்பதைக் கண்டதும் ஏதோ முக்கியமான பேச்சு என்று எண்ணி அவளும் ஒற்றுக் கேட்கலானாள்.

சதானந்தம், நான் யாருக்கும் ஒரு தீங்கும் செய்யவில்லையே! சிவன்தான் என்ன அப்படித் தீவிரவாதியாயிருக்கிறான்? எந்த விஷயத்தில் இருக்கிருன்? எனக்கு ஒன்றும் புரியவில்லை, முதலியார்வாள்!’ என்று வருத்தந் தொனிக்கக் கூறினார்.

மாசிலாமணி, நல்லவர்களுக்குத் தானே கெட்டது. செய்வது, இந்தக் காலத்துத் தருமமாயிருக்கிறது! பதவி வேட்டையாடுவதற்காகச் சந்தர்ப்பம் போல் வேஷம் போட்டுக் கூத்தாடும் சுயநலக் கூட்டத்தாரோடு சேர்ந்து நீங்கள் தாளம் போடவில்லையல்லவா! அது இன்று ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்களின் கண்களைக் கரிக்கிறது. அத்துடன் உங்கள் பிள்ளை கருப்பிலும், சிவப்பிலும் அதிகம் கவனம் செலுத்துகிறாளும், அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் செயலாளர்களில் ஒருவளாயிருக்கிறாளும்......'

"இருந்தால் என்ன? கல்லூரி மாணவனாயிருக்கும் அவன் மாணவர் சங்கத்தில்....."

"சேர்ந்து வேலை செய்யலாம், அண்ணா ஆனால் மேற்படி சம்மேளனம் இப்போது கம்யூனிஸ்டு கட்சியின் மனோபாவமுடையவர்களுடைய ஆதிக்கத்தில் இருக்கிறதாம். அதனால் தான், காங்கிரஸ் சார்புடைய மாணவர்களுக்கும் இதிலிருந்து பிரிந்து தனிச் சங்கம் ஏற்படுத்திக் கொண்டார்களாம். இவ் விஷயங்களெல்லாம் உங்களுக்குத் தெரியாதே!...”