பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பை பூ

159


கிறது; என்று பாராட்டுகிறார்களே தவிர, மல்லிகையைப் போல, முல்லையைப் போல, மற்ற மற்ற பூக்களைப் போல் இருக்கின்றன என்று யாருஞ் சொல்வதில்லை.

நான் இதைப் பற்றிச் சித்தித்துப் பார்ப்பதுண்டு தும்பைப்பூ, மல்லிகை முல்லை முதலிய பூக்களைப் போல, வெண்ணிற முடைய தல்ல; வாச மிகுந்தது மல்ல. அப்படியிருக்க, நறுமண மிக்க வெண்ணிற மல்லிகை முதலிய மலர்களைவிட, தும்பைப்பூ மக்களிடம் மதிப்பு எப்படிப் பெற்றது? என்று சமயம் ஏற்படுங் காலங்களில் எண்ணிப் பார்ப்பதுண்டு. மல்லிகை முல்லை முதலிய மலர்களின் நறுமணம் மக்களை மயக்கக் கூடியது ; மோகத்தை யுண்டாக்குவது; மூக்கைத் துளைத்து உட்புகுந்து உள்ளத்தில் கிளு கிளுப்பையும் உடம்பில் ஒருவிதக் கிறுகிறுப்பையும் உண்டாக்கக் கூடியது. தும்பைப் பூவின் ஒருவித மென்மையான வாசம் மோந்து பார்ப்போரை மயக்காது; அதற்குப் பதிலாக மயக்கத்தைப் போக்கும்; அதாவது மக்களை-முக்கியமாக மழலைச் செல்வங்களான குழந்தைகளைப் படிக்கும் சிற்சில நோகளைப் போக்கி உடம்பைக் குணப்படுத்த இது உதவுகிறது. ரம்பைப் பூவின் சாறு குழந்தைகளுக்கு அருமருந்து. ஔஷத மலிகைகளில் ஒன்றாகத் தும்பைப்பூ இருப்பதால் தான் பற்றப் பூவுக்கு இல்லாத மதிப்பு இதற்கு இருக்கிறது.

தும்பைப்பூ போன்றவள் என்று நான் மதிப்பதற்கு இதுதான் காரணம், எத்தனையோ மங்கையர் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களில் பலர் தங்களுக்குள்ள அழகாலும் பணி ஒப்பனைகளாலும் ஆடவரை மயக்குந் தன்மையுடையவரா யிருக்கின்றனர், நீயும் அந்த அழகு மகளிரைப் போல அழகுடையவள்தான் : ஆனால் உன் அழகு ஆண்களை மயக்கக் கூடியதல்ல, உன் அழகில் பகட்டு இல்லை: படாடோபம் இல்லை. வீடுகளில் தொட்டிகளில் பதியம் வைத்து வளர்க்கப்படும் பட்டு ரோஜாவுக்கும், காடுகளில் இயற்கையாக வளர்ந்து பூக்கும் காட்டு ரோஜாவுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா! அதுபோலத்தான் உனக்கும்

- களிரைப் போல் பருக்கின்றனர். வரை மயக்குந்