பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தும்பைப் பூ

மற்ற அழகிய நங்கையருக்கும் உனக்கும் வேறுபாடு இருக்கிறது. அழகு வாய்ந்த பெண்கள் சிலர் தங்கள் செயற்கை அலங்காரங்களால் மல்லிகை, முல்லைகளைப் போல, ஆண்கனை மயக்குகின்றனர். ஆனல் நீயோ தும்பைப் பூப்போல யாரையும் மயக்கவில்லே. உன் இளமையும் அழகும் உன்னிடமுள்ள கற்பு எனும் பொற்பினால் பார்ப்பவர்களை மனங்குவிந்து வணங்கச் செய்கின்றனவே யொழிய, உள்ளக் கிறு கிறுப்பை உண்டாக்கவில்லை. இப்போது நீ தரித்திருக்கும் பரிசுத்தமான வெண்ணிற ஆடை உன்னை ஒரு தேவதை போல அல்லவா காட்சியளிக்கச் செய்கிறது? வானத்தினின்றும் இழிந்து வந்துள்ள தெய்வப் பெண் போலல்லவா எண்ணச் செய்கிறது? காவல்லியமான இத்தூய வெள்ளாடைக்குள் நீ ஒரு பளிங்குப் படிவம் போல் விளங்குகிறாய். என் உள்ளத்தில் உன்னே நான் தெய்வமாக வைத்துவிட்டேன். ஆம், நான் அனுதினமும் வணங்கி வழிபடத்தக்க தெய்வம் நீ! நான் உன்ன வணங்குகிறேன்.

பிள்ளையவர்களுடைய நா மெல்ல உள்ளத்துக்குள் பேசித் கொண்டே போனது. அவரையறியாமல் அவர் கரங்கள் கூப்பின. அவர் உடம்பு ஒரு குலுங்கு குலுங்கி நின்றது. மங்கை திலகவதியின் உருவப்படத்தின் முன் கும்பிட்டு விழுந்து வணங்கி எழுந்திருப்பதற்கு முன், தாம் வந்த சுவடு தெரியாமல் அவ்விடத்தை விட்டுப் போய்விட வேண்டுமென்ற எண்ணத்தோடு, கண் ஆனது கைக்குட்டையால் துடைததுக் கொண்டு அவர் ஓசையெழாதவாறு மெல்ல அடிவைத்து நடந்து விரைந்து வெளியே போகலாஞர்.

முற்றுப் பெற்றது