பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தும்பைப் பூ

21

தானே தேறுதல் செய்து கொண்டாள். ஆனாலும் அவன் முகத்தைக் கடைக் கண்ணால் ஆராயலானாள்.

“அடே! தள்ளி வந்துவிட்டாயே, அப்பா! அந்த முன் வீடு; எங்களைக் கேட்டிருக்கக் கூடாது”? என்றாள் சிவகாமியம்மாள்.

“நம்பள்கி என்ன தெரியும்? நிம்பள் இல்லே உஷாராந்து சொல்லனும், நிம்பள் பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருந்தான். நாம்பள் ஜட்காவை ஒட்டிக்கிட்டே இருந்தான். நம்பள் மேலே தப்பு தண்டா இருந்தா ஒப்பிக்கறான், ஆயா சொல்லட்டும் ஞாயம்...” என்று சாயபு பாட்டுக்குப் பேசிக் கொண்டே குதிரையைப் பின்னுக்குப் போகச் செய்தான்.

“சரி, சரி, சாயபு நிறுத்து வண்டியை; இந்தப் பங்களாவுக்குள்ளே ஒட்டிக்கொண்டு போய் நிறுத்து” என்று சிவகாமியம்மாள் கட்டளையிட்டாள்.

சாயபு அவ்விதமே குதிரையை ஒட்டிக் கொண்டு போய் வண்டியை அம்மாளிகையின் முன் நிறுத்தினன்.

சிவகாமியம்மாள் உடையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த மங்கையர்க்கரசியை நோக்கி, “இறங்கம்மா, மங்கை” என்று சொன்னாள். அதன்படியே இறங்கினாள், பின் தாயிடமிருந்து துணி மூட்டையை வாங்கிக் கொண்டு வண்டியை விட்டு நகர்ந்து நின்றாள்.

வண்டி பங்களாவினுள் நுழையும்போதே தோட்டவேலை செய்து கொண்டிருந்த தோட்டக்காரன் ‘இவ்வளவு காலையில் யார் வருகிறார்கள்? கட்சிக்காரர்கள் வருகிறார்களா?’ என்று வேலை செய்வதை நிறுத்திவிட்டுக் கூர்ந்து பார்க்கலானான்; பெண்களாயிருப்பதுகண்டு, “வக்கீல் ஐயா வீட்டு மனுஷாள் போலிருக்கிறது” என்று எண்ணிக்கொண்டு வேடிக்கை பார்க்கலானான்.

வெளியே விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் வண்டியைப் பார்த்துவிட்டு, “அம்மா, வண்டி வந்து நிக்குது.