பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

35


திலகவதி இடைமறித்து, என்ன அப்படிச் சொல்கிறாய்? மங்கை, உன் உடன் பிறந்த அண்ணன் இல்லையா? அருமை அண்ணியில்லையா? மற்றும் உற்றார் உறவினர்...'

மங்கையர்க்கரசி, அக்கா! உங்களை மிகவும் மன்ருடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். யார் பேச்சை எடுத்தாலும் தயவு செய்து அண்ணன் பேச்சை மட்டும் எடுக்காதீர்கள்! அந்தச் சண்டாளனால்தான்...'

சாந்தமே உருவமாக விளங்கிய மங்கையர்க்கரசி இவ்விதம் ஆத்திரமாகப் பேசுவதைக் கேட்டுத் திலகவதி பேராச் சரியத்தில் ஆழ்ந்தாள். மங்கை, மடத்தனமாகப் பேசி உன் மனதைப் புண்படுத்திவிட்டேன். மன்னித்து விடு.சித்தி விஷயத்தைச் சொன்னர்கள்; இந்தக் காலத்தில் உடன் பிறந்தவர்களைக் கூட நம்புவதற்கில்லை......போகட்டும்; உன்னைப் பிடித்த சனி விட்டது என்று எண்ணிக் கொள், இனிமேல் நீ யாதொன்றுக்கும் கவலைப்படாதே. உன் ஆயுசு முழுதும் இங்கேயே இருந்து கழித்துவிடலாம். நான் முன் னேயும் சொல்லியிருக்கிறேன். இன்றைக்கும் சொல்லுகிறேன். நினைவில் வைத்துக் கொள். என் மூச்சு இருக்கும் வரைக்கும் உனக்கு யாதொரு குறைவும் இருக்காது. ஏன்! அதற்கு அப்புறம்கூட உனக்குக் குறைவு இருக்காது என்று உறுதியாகச் சொல்வேன். உன் அத்தானும் மிக நல்லவர். பிள்ளைகளும் உதார குணமுடையவர்கள். இப்போதே அவர் கள் அனைவரும் உன்மீது மிகவும் பிரியமாயிருக்கிறார்கள். இனி மேலும் உன்மீது, அன்பு அதிகமாகுமே யொழிய, குறைவதற்கு இடமில்லை......ஆகவே, இது உன் வீடு, இங்கிருப்பது எல்லாம் உன்னுடைய சொத்து; ஆதலால், உன இஷ்டப்படி சுதந்திரமாக எதுவும் செய்யலாம். எப்படியும் உசிதம் போல் நடந்து கொள்ளலாம். உனக்கு ஏதாயினும் வேண்டுமென்றால் தாராளமாக என்னைக் கேள்; அல்லது அத்தானிடம் சொல்லு. இல்லை; பெரிய பிள்ளை சிவகுமாரனைக் கேட்கலாம். கூச்சப்படவேண்டாம். உனக்கு மனக்குறை புண்டா