பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தும்பைப் பூ

தில் நடத்து வரும் அக்கிரமத்தைப் பார்த்தால், உத்தமர்கள், தியாகிகள் என்று நம்பியிருந்தவர்களெல்லாம் செய்து வருகிற காரியத்தைக் கவனித்தால், இனி இந்த உலகத்தில் யாரை நம்புவதென்றே தோன்றவில்லையே! இனி, காங்கிரஸ்காரன் என்று சொல்லிக் கொண்டு வெளியே தலைகாட்ட முடியாது போலிருக்கிறதே!...... நம்ப பயல் சிவகுமாரன் சொல்வதை என்னமோ என்று எண்ணியிருந்தேன். கடைசியாகப் பார்த்தால்......” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார். அவரைப் பின் தொடர்ந்து ஒரு கனவான் வந்து கொண்டிருந்தார்.

சதானந்தம் பிள்ளையின் குரலைக் கேட்டதுமே மங்கையர்க்கரசி துடித்துப் பதைத்து எழுந்து விட்டாள். அவர் உள்ளே வருவதற்குள் அவள் உன்ளறைக்குள் ஓடி விட்டாள், திலகவதி தன் கணவனுடன் யாரோ வருவதைக் கண்டதும் எழுந்து நின்றாள்.


4

தானந்தம் பிள்ளை மேல் உத்தரீயத்தை எடுத்து ஸ்டாண்டில் மாட்டியவாறே, “திலகம்! சாபி கொண்டு வரச் சொல்லு, எங்கள் இரண்டு பேருக்கும். சிற்றுண்டி ஏதேனும் செய்திருக்கிறதா? இருந்தால்.....” என்று தம் மனைவியை நோக்கிக் கேட்டார்.

திலகவதி, “இல்லை; இன்றைக்கு அஸ்வாரஸ்யமாய் இருந்துவிட்டோம்..... இதோ ஒரு நொடியில் செய்து கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனாள்.

கனவான், ஒன்றும் வேண்டாம், அண்ணா வீட்டை விட்டுப் புறப்படும்போது தான் சாப்பிட்டு விட்டு வந்தேன்.