பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தும்பைப்பூ


"நீங்க சாப்பிடுங்கள் முதலியார்வாள்! நான் இதோ ஒரு நொடியில் முகத்தை அலம்பிக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறிக் கொண்டு உள்ளே போகலானார்.

"அவசர மொன்றுமில்லை, அண்ணா ! நீங்களும் வாருங்கள்" என்று சொன்னார் மாசிலாமணி முதலியார்.

சதானந்தம் பிள்ளை மாலைக் கடன்களை முறையாக முடித்துக் கொண்டு வந்து உட்காருவதற்குள் மங்கையர்க்கரசி கோகிலாவிடம் காபியைக் கொடுத்து அனுப்பினாள்.

இருவரும் சிற்றுண்டியைச் சாப்பிட்டுக் கொண்டே பேசலாயினர்.

"என்ன அண்ணா, நீங்க சொல்வது உண்மைதானா? கோவிந்தசாமி கோனாரா இவ்விதம் கட்சி கட்டுகிறார்? தான் முதல் அமைச்சராக வரவா சட்டசபை அங்கத்தினர்களுக்கு ஆசை வார்த்தை பல கூறுகிறார்? ஆச்சரியமாயிருக் கிறதே ......"

"அப்படியானால் நான் பொய்யா சொல்கிறேன் என்கிறீர்கள்? கோனார்தான் இவ்வளவும் செய்கிறார் இந்த குலமால்களுக் கெல்லாம் அந்த ஐயன் தூண்டுகோல்", என்று பதிலளிக்கத் தொடங்கிய சதானந்தம் பிள்ளை "நான் ஒன்று பார்த்து விட்டேன் முதலியார்வாள்! என் அனுபவத்திலே. எப்பேர்ப்பட்ட மனுஷனையும் சந்தர்ப்பம் வந்தால் தான் சரியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொருத்தலும் ஒவ்வொரு விஷயத்திலே பலவீன மாய்த்தான் இருக்கிறான். எந்தப் புற்றிலே எத்தப் பாம்பு இருக்கிறதோ! யார் கண்டார்கள்?" என்று தெரியாமலா சொன்னார்கள் நம்ம பெரியோர்கள்..." என்று ஆழ்ந்த சிந்தனையோடு கூறினார்.

மாசிலாமணி முதலியார், "தங்களுடைய அனுபவத்திலே கண்டதை, கேட்டதை, தாங்களே அனுபவித்ததைத் தானே, ஆப்த வாக்கியங்களாக, பழமொழிகளாக, நீதி நூல்களாசக, தரும் சாஸ்திரங்களாகச் சொல்லி வைத்தார்கள்