பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தும்பைப் பூ

கழற்றுகையில் மூக்குக் கண்ணாடி கழன்று தவறி விழப் பார்த்தது.


“ஆ!” என்று பதறியோடி வந்து மங்கையர்க்கரசி மூக்குக் கண்ணாடி தரையில் விழுந்து உடைந்து போகாதவாறு தடுக்க முயன்றாள். ஆனால் அதற்குள் சதானந்தம் பிள்ளை அதைப் பிடித்துக் கொண்டார்.


“நல்லகாலம், மங்கை! கொஞ்சம் ஏமாந்திருந்தால் நாற்பது ஐம்பது ரூபாய் பழுத்துப்போயிருக்கும்” என்று அவர் கண்ணாடியைச் சரியாக மூக்கின்மீது மாட்டிக் கொண்டே மங்கையர்க்கரசியைப் பார்த்துச் சொன்னார்.


அத்தான் தன்னை ஏறிட்டு நோக்கிப் பேசுவதைக் கண்டதும் அவள் நாணத்தால் தலை கவிழ்ந்தாள். ஆனால், அவள் வாய் மட்டும் ‘ஆமாம்’ என்றது.


அடுக்களையில் வேலை செய்து கொண்டிருந்த மங்கையர்க்கரசி, வெளியில் திடீரென உண்டான மிதியடியோசை கேட்டு அத்தான்தான் வருகிறார் என்று அறிந்து கொண்டாள்.


ஆனால், நாலு மணி கூட ஆகாதிருக்கையில் அவர் கோர்ட்டிலிருந்து வரமுடியாது என்று அவள் ஐயற்றான்.. அவள் இவ்விதம் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே, கால்கள் முன்புறத்தை நோக்கி விரைந்தன. திலகவதி, “அத்தான் வந்திருக்கிறார் போலிருக்கிறது, பார்!" என்று சொல்வதற்கு முன்பே அவள் கூடத்துக்கு வந்துவிட்டாள். ஆனாலும், அவர் முன் எப்படிப் போவது, என்ன கேட்பது, பேசுவது என்ற அச்சத்துடனும் நாணத்துடனும் அவள் கதவோரத்தில் வந்து மலைத்து நிற்கலானாள்.


மாலை மஞ்சள் வெய்யில் ஒளி பட்டுப் பளபளத்த சதானந்தம் பிள்ளையின் ரோல்டு கோல்டு பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி மங்கையர்க்கரசியின் கண்களைப் பறித்தது. சிறிது வயதானாலும், கட்டுத் தளராத அவருடைய