பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

73

சொல்லாமல் வாங்கிச் சாப்பிட்டு விடணும். அப்போதான் அவங்க மனசு சாந்தப்படும்...” என்று கூறிய கோகிலா, “ஊம். கணேசா! இப்படி வா, சித்தி வருவதற்குள் நாம் உட்கார்ந்து பட்சணம் சாப்பிடணும். இல்லையானா... தெரியுமோ, இல்லையோ!”. என்றாள்.

கணேசன் மங்கை போன திசையைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்தான். விசுவநாதன் புன்னகை புரிந்தவாறே அமர்ந்தான். அவ்விருவர் முன்பும் பலகாரத் தட்டையும் தண்ணீர் டம்ளரையும் எடுத்துவைத்துவிட்டு, கோகிலாவும் உட்கார்ந்து பலகாரம் சாப்பிடலானாள்.

மங்கை, இதற்குள் ஹார்லிக்ஸ் டப்பியை எடுத்து ஒரு கிளாஸ் டம்ளரில் இரண்டு மூன்று கரண்டி போட்டுக் கலக்கிக் கொண்டே வந்து வைத்தாள்.

இச்சமயம், “கோகிலா, கோகிலா! சித்தியண்டை சொல்லி இரண்டு பேருக்குப் பலகாரமும் காபியும் வாங்கிக் கொண்டு வா” என்று சதானந்தம் பிள்ளை சாப்பாட்டு அறையின் வெளிப்பக்கம் நின்றுகொண்டே சொன்னார்.

குரல் கேட்டு நிமிர்ந்து எதிர்ப்பக்கம் பார்த்த மங்கையர்க்கரசி, அத்தானைக் கண்டதும் சடக்கெனத் தலையைக் குனிந்து கொண்டாள். அவருக்கும் மங்கையை பார்த்ததும் வெட்க முண்டாயிற்று.

“இதோ எடுத்துக்கொண்டு வருகிறேன். அத்தான்’ என்று மங்கை, கோகிலா சாப்பிடுவதை விட்டுவிட்டு எழுந்திருப்பதைக் கண்டு, நீ உட்கார்ந்து சாப்பிடு, கோகிலா! நான் எடுத்துக்கொண்டு போகிறேன்” என்று கையமர்த்தினாள்.

சதானந்தம் பிள்ளை முகத்தைத் திருப்பிக் கொண்டே, “அவசரமில்லை, கோகிலா சாப்பிட்டுவிட்டே கொண்டு வரலாம். தயாரிப்புக்காக முன்னே வந்து சொன்னேன்... பலகாரம் இருக்கிறதோ இல்லையோ...நாங்கள் பேசிக்
து ― 5