பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தும்பைப் பூ

நாசூக்காக மேஜை முன் உட்கார்ந்து உத்தியோகம் பார்த்து விட்டு வரும் பெரிய உத்தியோகஸ்தர் வரை தம்தம் அலுவலை நாடி அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தனர். சிறிதும் சிரமமின்றிக் காலத்தைத்தள்ளி எப்படியோ உணவுக்கும் உடைக்கும் வழி செய்து கொண்டு உயிர்வாழும் சோம்பேறிகளும் உடல் நலுங்காமல் ஒய்யாரமாக நடந்து உல்லாச வாழ்க்கை நடத்தும் உலுத்தர்களும், ஒரு கவளம் சோற்றையும் சீரணிக்க முடியாமல் மலைப்பாம்பு போல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் பணத் தொந்திகளும் தவிர, மற்றவர்களெல்லாம் பரபரப்பாகத் தங்கள் பாட்டைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

மணி ஒன்பதாய் விட்டது. சதானந்தம் பிள்ளை வீடு அன்று வழக்கத்தைவிட பரபரப்பாக இருந்தது. மாளிகையின் முற்பகுதியிலுள்ள ஆபீஸ் அறையில் கட்சிக்காரர்கள் சதானந்தம் பிள்ளையைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் காங்கிரஸ்காரர்களும், பொதுநலத் தொண்டர்களும் அவருடன் பேசுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். குமாஸ்தா அன்று கோர்ட்டில் ஆஜராகி வாதாட வேண்டிய வழக்குகளைப் பற்றிய விவரங்களே ஞாபகப்படுத்தி ‘கேஸ்’ கட்டுகளை ஒவ்வொன்றாக அவர் முன் வைத்தவாறு இருந்தான் வழக்கு தஸ்தாவேஜுகளை முறையாகப் பிரித்துப் பார்த்து வந்த பிள்ளையவர்கள் அவைபற்றித் தமக்குள் ஏற்படும் சந்தேகங்களையும் விவரமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விளக்கங்களையும் சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்களை விசாரித்து அறிந்து கொண்டிருந்தார்.

உள்ளே சிவகுமாரனும், விசுவநாதனும் கல்லூரிக்குப் போக அவசர அவசரமாக ஆயத்தஞ் செய்து கெர்ண்டிருந்தனர். கோகிலா குளித்து விட்டு வந்து தலை வாரிக் கொண்டிருந்தாள். “ஊம்; மணியாகி விட்டது. சீக்கிரம் சாப்பிட்டு விட்டுப் போங்கள்.” திலகவதி பிள்ளைகளைத் துரிதப்படுத்திக் கொண்டிருந்தாள். மங்கையர்க்கரசி அவர்களுக்கு வேண்டியவைகளைக் கவளித்துச் செய்து விட்டு, கடைக்குட்டிக்