பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தும்பைப் பூ


திலகவதிக்குத் தாங்கமுடியாத கோபம் உண்டாம் விட்டது. “ஆமாம்! எனக்கு வயசாகிவிட்டது. உங்க அப்பாவுக்கு வேறே கலியாணஞ் செய்து வைத்துவிடுங்கள், சிறுசாகப் பார்த்து. என்ன!”

விசுவநாதன் தாயின் கோபத்தைக் கண்டு அஞ்சினாயினும், தமாஷாகப் பேசி நிலைமையை மாற்றவேண்டும் எனக் கருதி, “அம்மா, காளியவதாரம் எடுத்துவிட்டார்கள். வா, கோகிலா! தம்பியை அழைத்துக்கொண்டு; போகலாம்...” என்று சிரித்துக்கொண்டே கூறினான்.

நீ“ங்களெல்லாம் என்னை மதிக்காமல் இப்படிப்பேசுவதால்தான், மங்கையும் மதிக்கமாட்டேன் என்கிறாள்” என்று அலுத்துக்கொண்டாள் திலகவதி.

“அம்மா பேசுகிறதைப் பேசிக்கொண்டே போகட்டும். ஏதாயினும் செய்திருந்தால் கொடுத்தனுப்புங்கள், சித்தி! கோகிலாவிடம்” என்று கூறியவாறு விசுவநாதன் அஷ் விடத்தைவிட்டுப் போனான்.

“நான் உங்களுடன்கூட வேலை செய்யட்டுமா, சித்தி!” என்று கேட்டுக்கொண்டே அருகே போனாள் கோகிலா.

“சித்தி, சித்தி என்று எதற்கெடுத்தாலும் அவளை நீங்கள் சுற்றிக்கொண்டு வருவதால்தான், மங்கை தலைக்குமேல் ஏறியிருக்கிறாள்” என்று எரிச்சலோடு கூறினாள் திலகவதி.

மங்கை, “நான் அப்படியொன்றும் இல்லை, அக்கா! நேற்று வந்து நாளே போகப் போகிறவள்; எனக்கென்ன அதிகாரம் வேண்டியிருக்கு...” என்று மெல்லக் கூறினாள்.

கோகிலா அவள் மோவாயைக் கனிவாகப் பற்றி, “நீங்கள் பேசாதிருங்கள், சித்தி அம்மாவுக்கு என்னவோ...”

திலகவதி மகளுடைய கரத்தை வெடுக்கெனப் பற்றி இழுத்து ஒரு பக்கம் தள்ளியவாறு, “எனக்கு என்னடி, வந்திருக்கு? எல்லோரும் சேர்ந்து என்னைப் பைத்தியக்காரி