பக்கம்:துறைமுகம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 கவிஞர் சுரதா பாட்டுத் தோட்டம் மூத்துப் பூத்த மூதாட்டி ஒளவையும்: அச்சுத்தேர் ஏறிய அதிவீர ராமனும். தேரூரில் பிறந்த தேசிக விநாயகம் பிள்ளையும், அந்தோணி சாமி பிள்ளையும், பாரதி யாரும், பாரதி தாசனும், சிறுவர்க்குப் பாட்டுச் சிந்தனை வழங்கிப் பிறர்க்குவழி காட்டிய பெரிய கவிஞர்கள் மூத்த தலைமுறை முடிவுற்ற பின்னர் அடுத்த தலைமுறை அரும்பி மலர்ந்து, குழந்தைப் பாடல்கள் கொடுப்பதைப் பார்க்கிறோம் சிறுவர்க் கேற்ற சிறந்த பாடலை இந்நாளில் வழங்கும் எண்ணற்ற கவிஞருள் வண்டு தொடும்பூ வண்ணனும் ஒருவர். புதுப்புகழ் நீட்டும் புலவர்போல், எழுத்தில் புதுமையைக் காட்டும் பூவண்ணன் அவர்கள். ‘புலவர்மகன்' என்னும் புத்தகம் எழுதிப் பரிந்துரை இன்றியே பரிசு பெற்றவர். இந்த நாட்டில் இவரே முதன்முதல் குழந்தை இலக்கிய வரலாறு கொடுத்தவர். இப்படிப் பட்டவர், இளைஞர்க் காகப் படைத்த சுவடியே பாட்டுத் தோட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/101&oldid=923976" இலிருந்து மீள்விக்கப்பட்டது