பக்கம்:துறைமுகம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 106 பாட்டுத் தோட்டத்தில் பாரதி இருக்கிறார். பாரதி இருப்பதால் பாரதி தாசனும் இருந்திட வேண்டும். எனினுமவர் இல்லை! முத்தமிழ் மோனை முதலில் வந்தபின் எதுகை வராமல் இருப்பது சரியா, "அன்னை காவிரித் தாயே உன்னைப் பொன்னி என்பது ஏனோ? மண்ணை நன்கு செழிக்கச் செய்து பொன்னை விளைக்கச் செய்தாய் அதை எண்ணி எண்ணி உழவர் உனக்கு இட்ட பெயரோ பொன்னி' என்றிவர் காவிரிக் கன்னியைக் கேட்கும் பாட்டின் அடிகள், பழுத்த புலமையைக் காட்டும் அடிகள் கற்பனை வீக்கம்! பிச்சை இடுவதும் பிச்சை எடுப்பதும் நமக்கவ மானம்! நாட்டுக்கும் ஊனம் என்னும் கருத்தில் எழுந்துள்ள பாடல், சாத்திரப் பழமைக்குச் சரியான சவுக்கடி அறிவியல் கற்பேன்- நான் அனுதினம் கற்பேன் பெரிய விஞ்ஞானி- எனும் பெயரும் வாங்குவேன். சந்த்ர மண்டலம் நான் சென்று மீளுவேன் வந்து சந்தரனின்- பல விந்தை சொல்லுவேன். என்னும் அடிகள், இந்தநூற் றாண்டு . மனிதன்விஞ் ஞானியாய் மாற முயல்கிறான் என்பதை உணர்த்தும் எண்ணச் சுவடுகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/102&oldid=923977" இலிருந்து மீள்விக்கப்பட்டது