பக்கம்:துறைமுகம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 கவிஞர் சுரதா வேடன் தாங்கல் போகலாம் வேடன் தாங்கல் போகலாம் கோடி கோடி பறவை கண்டு ஆடிப் பாடி மகிழலாம் என்று சிறுவர் இடத்தில் உரைப்பதும், காரணம் கூறிக் காஞ்சிக் கழைப்பதும், பல்லவர் காலத்துக் கல்ரதம் காணப் புறப்படு மாமல்ல புரத்துக் கென்பதும் பயன்தரக் கூடிய பயணப் பாடல்கள். 'நெடுங்கடல் என்பது, நெய்தல் நிலத்தின் ஒரத்தைக் குறிக்கும் உப்புநீர் விளம்பரம்' என்றுநான் பாடி இருக்கிறேன். இவரோ, நீலக் கடல் நெளியும் கடல் நிலத்தை விழுங்க நிற்குது முத்துக் கடல் மூத்த கடல் முதுகில் கப்பல் சுமக்குது: என்கிறார். நாள்தொறும் ஏங்கும் கடலின் முதுமையை உணர்த்த மூத்தகடல் என்கிறார். குறிப்பிட்ட மூன்றடி கொண்ட பாட்டுநூல் ஒன்றுநம் நாட்டில் உளதாம். அதன்பெயர் மூவடி முப்பது. மூவடி முப்பதோ, இலக்கியக் கிழவர் இடைக்காடனாரின் அறிவின் அறுவடை அந்நூல் போலவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/103&oldid=923978" இலிருந்து மீள்விக்கப்பட்டது