பக்கம்:துறைமுகம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 108 இலையைப் பறிக்காதே பாப்பா -ஓர் இலைக்குள்ளும் உணர்வுண்டு, இன்னலும் உண்டு; இலையைப் பறிக்காதே பாப்பா. என்றும் கிளையை முறிக்காதே என்றும்; சீவ காருண்யச் சிந்தனை ஏறிய மூவடிப் பாடல் முத்திரை பதித்துளார். ஏழைப் புலவர்கள் எதிர்பார்த்து நிற்கையில், 'இரும் பொறும் என்றே இழுத்தடிக் காதவன் இரும்பொறை அந்தக் கணைக்கால் இரும்பொறை, விழித்த வீரமும் மிக்கபே ராற்றலும், அரசியல் நுணுக்கமும்; அஞ்சா நெஞ்சமும், கொண்டு விளங்கிய கோமகன் படையொடு முன்னின் றெதிர்த்த மூவனென் பானைக் கொன்று வீழ்த்திய குகைப்புலி களத்தில் பட்டு வீழ்ந்தோனின் பல்லைப் பிடுங்கிக் கற்கோட்டை வாயிற் கதவில் பதித்தவன். அந்த மன்னனின் சொந்தவர லாற்றைப் பரிதிமாற் கலைஞரும் பாடலாய் வடித்துளார். இந்தக் கவிஞரும் இந்நூலில் தந்துளார். இருவரும் தந்துளர் என்ற போதிலும், இவரது பாடலில் இருக்கும் எளிமை அவரது பாடல் அடிகளில் இல்லை. மணல்வீடு கட்டி மகிழும் சிறார்க்குப் பச்சை மரத்தின் உச்சியைக் காட்டி, அதற்குப் பின்னர் அம்புலி காட்டல்போல், அரும்புச் சிறுவரின் அறிவுநிலை யறிந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/104&oldid=923979" இலிருந்து மீள்விக்கப்பட்டது