பக்கம்:துறைமுகம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 140 கட்டில் வினை சினத்திலன்றி அமைதியிலே வீரத்தின் வரலாறு தெரிவ தில்லை. மனத்திலன்றி விழிகளிலே எண்ணங்கள் மலர்வதில்லை. மங்கை மாதர் தனத்திலன்றிச் சந்தனத்தில் பால்சுரந்து விடுவதில்லை; சத்தில் லாத நுனிப்பாட்டு நூல்கற்றோர் புத்தகத்தில் புதுமைகளே நுழைவ தில்லை. மின்னிடத்தில் ஒளியுண்டு சுனைநீரில் தெளிவுண்டு; மேன்மை மிக்க பொன்னிடத்தில் பொலிவுண்டு; பூவிடத்தில் மணமுண்டு புதுமை வாணன் தன்னிடத்தில் என்திறமை சரிபாதி உண்டென்பேன். தமிழ்நூல் கற்றோர் என்னிடத்தில் எதிர்பார்க்கும் செய்யுள்நயம் இக்கவிஞர் இடத்து முண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/106&oldid=923981" இலிருந்து மீள்விக்கப்பட்டது