பக்கம்:துறைமுகம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 112 சிரித்து மகிழுங்கள் விழாதவர்கள் சிலருண்டு கொண்ட கொள்கை விடாதவர்கள் சிலருண்டு விடிந்த பின்னும் எழாதவர்கள் சிலருண்டு; பசித்தோர்க் கன்னம் இடாதவர்கள் சிலருண்டு கோயில் சென்று தொழாதவர்கள் சிலருண்டு பருவப் பெண்ணைத் தொடாதவர்கள் சிலருண்டு; விம்மி விம்மி அழாதவர்கள் இவ்வுலகில் யாரு மில்லை. அகிலத்தில் சிரிக்காதார் எவரு மில்லை. எரிப்பதற்கும் புதைப்பதற்கும் கார ணங்கள் எத்தனையோ இங்குண்டு. நாமெல் லோரும் சிரிப்பதற்கும் அழுவதற்கும் கார ணங்கள் சிலவுண்டு, சிலசமயம் பலவும் உண்டு. நெருக்கடிகள் வரும்போதும், கொடிய துன்ப நிகழ்ச்சிகளால் தாக்குற்றுக் கலங்கும் போதும், சிரிப்பதற்கு முயன்றாலும் முடிவ தில்லை. சிலர்சிரிப்பில் வஞ்சகமே நுழைவ தில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/108&oldid=923983" இலிருந்து மீள்விக்கப்பட்டது