பக்கம்:துறைமுகம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 கவிஞர் சுரதா முன்கோபக் காரனையும், அக்பர் என்னும் மொகலாய மன்னனையும் பீர்பால் என்பான் அன்றாடம் சிரிக்கவைத்தான். நாட்டு மக்கள் . அனைவரையும் நகைச்சுவையால் மகிழ வைத்தான். தென்னாலி ராமனென்பான் தனது பேச்சுத் திறத்தாலே அனைவரையும் சிரிக்க வைத்தான். நான்றாக நாமெல்லாம் சிரிக்க வேண்டும். நம்மைவிட வெளிநாட்டார் சிரிக்கின்றார்கள். அரிப்பூட்டும் கொக்கோகம் எழுதி னானே அன்னவனால், அவனெழுத்தால், நெஞ்சில் காம நெருப்பூட்ட முடிந்ததன்றிச் சிரிக்க வைக்க நிச்சயமாய் ஒருபோதும் முடிய வில்லை. சிரிப்பூட்டிச் சிந்திக்க வைப்ப தற்குத் திறன்வேண்டும், அத்திறமை பலருக் கில்லை. சிரிப்பூட்டும் துணுக்குகளை எழுது தற்கும் திறன்வேண்டும். அத்திறமை சிலர்க்கே உண்டு. ஆனந்த விகடனிங்குத் தோன்று முன்பே ஆயிரத்தெண் ணுற்றெண்பத் தைந்தில் தோன்றி மானிடர்க்கு நகைக்கவையை வழங்கி வந்த மகாவிகட தூதனெனும் இதழைப் போன்று தேனொழுகும் துணுக்குகளை வாரா வாரம் சிறப்பாகத் தருதற்கோர் ஏடு வேண்டும். வானம்தான் இருக்கிறது. முகில்தான் இல்லை! வான்கோழி இருக்கிறது. மயிலைக் காணோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/109&oldid=923984" இலிருந்து மீள்விக்கப்பட்டது