பக்கம்:துறைமுகம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 114 அகச்சுவைநூல் அதிகமுண்டு நமது நாட்டில் ஆயினும்நம் நாட்டினிலே மிகுதி யாக நகைச்சுவைநூல் தோன்றவில்லை; மேலை நாட்டில் நாள்தோறும் நகைச்சுவைநூல் தோன்றக் கண்டும், புகைச்சல்வரும் கீர்த்தனையும், பிறருள் ளத்தைப் புண்படுத்தும் கட்டுரையும் தீட்டு கின்றோம். சிகிச்சைசெய்யும் நகைச்சுவைநூல் தோன்றா விட்டால் தேசத்தில் அழுகுரலே அதிக மாகும். ஈசனையும் இறைவியையும் பற்றி முன்னோர் எழுதிவைத்த பாடல்களைத் தொகுத்த ளித்தால், பூசனைக்கும் பூசாரிக் கூட்டத் திற்கும் புராணிகர்க்கும் அந்நூற்கள் உதவு மன்றித் தேசத்தில் முன்னேற்றம் காண்ப தற்குச் சிறிதுமுத வாதன்றோ? அதனால், கல்வி வாசனையும் யோசனையும் உடைய சீனி வாசனொரு நகைச்சுவைநூல் வழங்கி யுள்ளார். புவிபுகழும் மெக்காலே என்பான் கையில் புத்தகந்தான் எப்போதும் இருக்கு மென்பர். அவனைப்போல் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே ஆராய்ச்சி செயும்டாக்டர் சீனி வாசன், சுவைமிகுந்த துணுக்குகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளார். திறனாய்வும் இதில் சேர்த்துள்ளார். இவருடைய திறனாய்வும் இந்த நூலும், இந்நாட்டுக் கிப்போது மிகவும் தேவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/110&oldid=923986" இலிருந்து மீள்விக்கப்பட்டது