பக்கம்:துறைமுகம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 116 சந்தனக் கிண்ணம் மேதினியோர் பாராட்டும் உலக நீதி' விளக்கத்தைத் தந்தானோர் உலக நாதன். காதலெனச் சுவையூட்டும் தமிழில், 'கன்றும் கனியுதவும் தந்தானோர் உலக நாதன். சாதிகளின் வேரறுக்கும் இருபு கீதை' தமிழர்க்குத் தந்தானோர் உலக நாதன். ஆதிமொழி யாம்தமிழில் புதுநூல் ஒன்றை அளித்துள்ளார் நமக்கிந்த உலக நாதன். சந்தனத்தை வைப்பதற்குக் கிண்ண முண்டு: தயிரதனை வைப்பதற்குப் பானை யுண்டு: வெந்தயத்தை வைப்பதற்குக் கலய முண்டு; வெற்றியினை வைப்பதற்குத் திசைகள் உண்டு சிந்தனைச்சந் தனக்கிண்ணம் என்னும் இந்நூல், தேசத்தின் வளர்ச்சிக்கு வழிகள் காட்டிப் பந்தயத்தில் வெற்றிபெறும்! எனவே இந்தப் பாடலுக்கும் புகழுலகில் வரவேற் புண்டு! 'மலேசியக் கவிஞர் ஐ. உலகநாதன் அவர்கள் எழுதிய 'சந்தனக் கிண்ணம் என்னும் கவிதை நூலுக்கு 1966 ல் வழங்கிய அணிந்துரை. . . . " . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/112&oldid=923988" இலிருந்து மீள்விக்கப்பட்டது